தமிழ் வேர்களை மறவாத பிரிட்டிஷ் நடிகை

பிரிட்டிஷ் நடிகை சரித்திர சந்திரன், ‘பிரிட்ஜெர்டன் சீசன் 2’ எனும் நெட்ஃபிளிக்ஸ் நாடகத் தொடரில் குமாரி எட்வினா சர்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்தது பலரும் அறிந்ததே.

ஸ்காட்லாந்தில் பிறந்த சரித்திர சந்திரன், 25, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளவர். தமிழ்க் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, இவருடைய பெற்றோர் பிரிந்தனர்.

அதன் பின்னர், தம்முடைய தந்தையுடன் தமிழ்நாட்டிற்கு வந்த இவர், நான்கு வயது வரை அங்கு இருந்தார். அதையடுத்து பிரிட்டனுக்குச் சென்றார்.

காலம் கடந்தும் தமது தமிழ் வேர்களை மறவாமல் அவற்றை சரித்திர சந்திரன் அரவணைப்பது மனத்திற்கு இதம் தருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட இவர், அங்கு தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலுக்குச் சென்றது முதல் உணவுக் கடையில் அமர்ந்து கொத்து பராட்டா சாப்பிடுவது வரை ரசிகர்களின் மனதைக் கவரும் பல்வேறு புகைப்படங்களை இவர் பதிவிட்டார்.

“இதுவே எனக்கு மிகவும் பிரியமான உணவு. ஒருமுறை நான் தொடர்ந்து 30 நாள்களுக்கு கொத்து பராட்டாவை சாப்பிட்டேன்,” என்று இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் இவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!