வானிலை ஆய்வகம்: ஐந்து நாள் கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை: வங்­கக்­க­ட­லில் புதிய காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகுதி உரு­வா­கி­யுள்­ள­தாக இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதன் எதி­ரொ­லி­யாக இன்று முதல் ஐந்து நாள்­க­ளுக்கு கன­மழை பெய்­யக்­கூ­டும் என்­றும், நாளை கன­மழை மேலும் வலுக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

நாளைக்­குள் தமி­ழ­கம், புதுச்­சேரி கடற்­கரை ஆகிய பகு­தி­களை நோக்கி இந்­தக் காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகுதி நகர்ந்து வரும் என்­றும் கூறப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், தமிழ்­நாட்­டின் கட­லோர மாவட்­டங்­கள், அதனை ஒட்­டிய மாவட்­டங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு இன்று ஆரஞ்சு நிற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கட­லோ­ரப் பகு­தி­களில் சூறா­வளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை­யி­லான வேகத்­தில் வீசக்­கூ­டும் என்­ப­தால் மீன­வர்­கள் இன்­றும் நாளை­யும் கட­லுக்­குள் செல்ல வேண்­டாம் என்று அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

சென்னை உள்ளிட்ட மாநி­லத்­தின் வடக்­கில் உள்ள கடற்­க­ரைப் பகு­தி­களில் இம்முறை மழை அதி­க­மி­ருக்­கும் என முன்­னு­ரைக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!