பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட ஐவர் பலி

மதுரை: மதுரை மாவட்­டம், திரு­மங்­க­லம் அருகே உள்ள அழ­கு­சிறை கிரா­மத்­தில் செயல்­பட்டு வந்த பட்­டாசு ஆலை­யில் நேற்று ஏற்­பட்ட வெடி­வி­பத்­தில் ஐவர் உயி­ரி­ழந்­த­னர்.

தீய­ணைப்பு வீரர்­களும் காவல்­து­றை­யி­ன­ரும் காயம் அடைந்த 13 பேரை மீட்டு மதுரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச் சைக்­காக அனு­ம­தித்­துள்­ள­னர்.

பட்­டாசு ஆலை­யில் ஏராள மானோர் பணி­பு­ரிந்து கொண்டி ருந்த நிலை­யில், திடீ­ரென வெடி­வி­பத்து நேர்ந்­ததை அடுத்து, பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்த ஊழி யர்­கள் அல­றி­ய­டித்­துக்­கொண்டு ஓடி­னர்.

எனி­னும், அம்­மாசி, வல்­ல­ரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகிய ஐவ­ரும் விபத்­தில் சிக்கி சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

விபத்து ஏற்­பட்ட இடத்­தில் இருந்த மூன்று கட்­ட­டங்­களும் தரை­மட்­ட­மாகி விட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சம்­ப­வம் நடந்த இடத்­தில் வணிக வரித்­துறை அமைச்­சர் பி.மூர்த்தி, முன்­னாள் அமைச்­சர் ஆர்.பி. உத­ய­கு­மார், மாவட்ட ஆட்­சி­யர் அனீஸ் சேகர் உள்­ளிட் டோர் ஆய்வு செய்­த­னர்.

விபத்­துக்­கான கார­ணம் குறித்து காவ­லர்­கள் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

வெடி விபத்­தில் உயி­ரி­ழந்த வர்­கள் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துள்ள முதல்­வர் மு.க.ஸ்டா­லின், வெடி விபத்­தில் சிக்கி உயி­ரி­ழந்த ஐவ­ரின் குடும்­பத்­துக்­கும் தலா ரூ.5 லட்­சம் நிதி­யு­தவி வழங்­கப்­படும் என அறி­வித்­துள்­ளார்.

வெடி விபத்து நடந்த இடம். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!