திண்டுக்கல்லில் மோடி, சென்னையில் அமித்ஷா; தமிழகத்தைக் குறிவைக்கும் பாஜக

சென்னை: ஒரு­பு­றம் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி கலந்துகொண்டு நேற்று பட்­டங்­களை வழங்­கிய நிலை­யில், மறு­பு­றம் இன்று மத்­திய உள்­துறை அமைச்­சர் சென்­னை­யில் ஆலோ­சனை நடத்த வந்­தி­ருப்­பது பாஜக தொண்­டர்­கள் மத்­தி­யில் உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

திண்­டுக்­கல்லை அடுத்த காந்தி­கி­ரா­மத்­தில் அமைந்­துள்ள கிரா­மி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 36வது பட்­ட­ம­ளிப்பு விழா நேற்று நடை­பெற்­றது.

இவ்­வி­ழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட பிர­த­மர் மோடி இள­நிலை, முது­நி­லைப் படிப்பு­களில் முதல் மதிப்­பெண் பெற்ற மாணவ, மாண­வி­யர் நால்­வ­ருக்­குப் பட்­டங்­களை வழங்­கி­னார்.

இதே­போல், கலை­கள் மூலம் சமு­தா­யத்­துக்­குப் பெரும் பங்­காற்றி வரும் திரைப்­பட இசை­ய­மைப்­பாளா் இளை­ய­ராஜா, மிரு­தங்க வித்­வான் உமை­யாள்­பு­ரம் சிவ­ரா­மன் ஆகி­யோ­ருக்­கும் கெள­ரவ டாக்டா் பட்­டங்­களை வழங்­கி­னார்.

விழா­வில் இள­நிலை, முது­நிலை, பட்­ட­யப் படிப்­பு­களை முடித்த 2,314 மாண­வா்­க­ளுக்­கும் பட்­டங்­கள் வழங்­கப்­பட்­டன.

இத­னி­டையே, பட்­ட­ம­ளிப்பு விழா நிகழ்­வில் கலந்­து­கொள்­ளும் பிர­த­மர் மோடிக்­கும் முதல்­வர் ஸ்டா­லி­னுக்­கும் பாது­காப்பு அச்­சு­றுத்­தல் இருப்­ப­தாக உள­வுத்­துறை எச்­ச­ரித்­தி­ருந்ததை அடுத்து, பலத்த பாது­காப்­பும் போடப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், அமித்ஷா நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வரு­வதா­க­வும் இன்று சென்­னை­யில் நடை­பெ­றும் இந்­தியா சிமெண்ட்ஸ் நிறு­வ­னத்­தின் 75வது ஆண்டு விழா­வில் பங்­கேற்க உள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

பாஜ­க­வின் முக்­கிய நிர்­வா­கி­கள், ஓபி­எஸ், இபி­எஸ்­சை­யும் தனித்­தனி­யா­கச் சந்­தித்து அவர் ஆலோ­சனை நடத்­து­வார் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­தி­யா­வில் பல்­வேறு மாநி­லங்­க­ளைப் பாஜக கைப்­பற்­றி­யுள்ள நிலை­யில், தமி­ழ­கம் உள்­ளிட்ட ஒரு சில மாநி­லங்­களில் மட்­டும் பாஜ­க­வால் கால் ஊன்­ற­மு­டி­யாத நிலை உள்­ளது. இத­னை­ய­டுத்து, தமி­ழ­கத்­தில் பாஜ­கவை வளப்­ப­டுத்த மத்­திய அரசு முடி­வெ­டுத்­துள்­ள­தா­க­வும் இதற்­கா­கவே பாஜக தலை­வர்­கள் அடுத்­த­டுத்து தமி­ழ­கம் வருவ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் 25 தொகு­தியை இலக்­காக வைத்து பாஜக செயல்­ப­டு­வதாகவும் தமி­ழ­கம் மீது பாஜ­க­வின் கண் உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "தென்னிந்திய மொழி களை அனைவரும் கற்கவேண்டும், அதிலும் தமிழைக் கற்கவேண்டும்," என்றவர், அவசர காலகட்டத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டிய லுக்கு மாற்றவேண்டும் என பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 'பொன்னியின் செல்வன்' நூலின் ஆங்கிலப் பதிப்பை அன்பளிப்பாக வழங்கினார்.

இசையுலகில் ஆற்றிய சேவையைப் பாராட்டி இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!