‘மெட்ராஸ் ஐ’ பாதிப்புக்காக மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

சென்னை: தலை­ந­கர் சென்னை யில் 'மெட்­ராஸ் ஐ' என்ற கண் நோயின் தாக்­கம் வேக­மா­கப் பரவி வரு­வ­தாக எச்­ச­ரித்­துள்ள மருத்­து­வர்­கள், பொது­மக்­கள் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் எனவும் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இக்கண் நோய் பாதிப்புடன் அரசு, தனி­யார் மருத்­து­வ­மனை­களில் தினமும் நூற்­றுக்­கணக்­கா­னோர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவா்கள் கூறி­யுள்­ளனா்.

விழி­யை­யும் இமை­யை­யும் இணைக்­கும் சவ்­வுப் பட­லத்­தில் ஏற்­படும் கிரு­மித்­தொற்­று­தான் 'மெட்­ராஸ்-ஐ' என கூறப்­ப­டு­கிறது.

இது ­குறித்து சென்னை எழும்­பூர் அரசு கண் மருத்­து­வ­மனை இயக்­கு­நர் எம்.வி.எஸ்.பிர­காஷ் கூறி­ய­போது, "மெட்­ராஸ் ஐ' எளி தில் தொற்றும் தன்மை உடை யது என்பதால், தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் தங்­களைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும். துண்டு, சோப்பு, படுக்கை உள்­ளிட்­ட­வற்றை மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளக் கூடாது.

"ஐந்து நாள்­களில் இத் தொற்றில் இருந்து குண­மடை­ய லாம் என்­றா­லும், ஒரு சில­ருக்கு பார்­வை­யி­ழப்பும் ஏற்படலாம். எனவே, அலட்­சி­யம் காட்­டா­மல் கண் மருத்­து­வ­ரி­டம் சிகிச்சை பெறு­வது நல்­லது," என்றார்.

டாக்­டர் அகர்­வால்ஸ் கண் மருத்­து­வ­ம­னை­யின் முது­நிலை கண் மருத்­து­வ­ர் ஆர்.கலாதேவி கூறு­கை­யில், "சென்­னை­யில் குழந்­தை­கள், சிறு­வர்­கள் மத்­தி­யில் இந்தப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்­வோர் ஆண்­டும் பரு­வ­ம­ழை முடியும்போதுதான் இந்தக் கண் நோய் பாதிப்பு சற்று அதிகமாக தலைகாட்டும்.

"ஆனால், இவ்வாண்டு சென்னையில் மழைப்­பொ­ழிவு காலம் நீடித்­துள்ள நிலையில், 'மெட்­ராஸ் ஐ' பாதிப்பும் மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

"நோயா­ளி­கள் வெளி­யி­டங்­களுக்குச் செல்­வதைத் தவிர்த்துக் கொண்டு வீட்­டி­ல் தனித்­தி­ருப்­பது நல்­லது. கண் எரிச்­சல், விழிப் பகுதி சிவந்து காணப்­ப­டு­தல், நீா் சுரந்துகொண்டே இருத்­தல், இமைப்­பகுதி ஒட்­டிக்­கொள்­ளு­தல் உள்­ளிட்­டவை இந்த 'மெட்­ராஸ்-ஐ' நோயின் முக்­கிய அறி­கு­றி­க­ள். இப்பாதிப்பு காற்று, மாசு வாயி­லா­கப் பர­வக்­கூ­டும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!