‘அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது’

மயி­லா­டு­துறை: அம்மா முன்­னேற்றக் கழக பொதுச் செய­லா­ளர் டி.டி.வி. தின­க­ரன், அதி­முக செயல்­ப­டாத நிலை­யில் உள்­ளது என்று தெரி­வித்து உள்­ளார்.

எடப்­பாடி பழ­னி­சாமி செய்த தவ­றால் சின்­னம் இல்­லா­மல் அவர் தற்­போது நீதி­மன்­றத்­தில் போராட்­டம் நடத்தி வரு­கி­றார். அதி­முக பற்றி பேசு­வது தேவையற்­றது என்­றும் அவர் கூறி­னார்.

டி.டி.வி. தின­க­ரன், நட்­சத்­தி­ரப்­படி தனது 59வது வயது நிறை­வ­டைந்து 60வது வயது தொடங்­கு­வதை முன்­னிட்டு திருக்­க­டை­யூ­ரில் உக்­கிர ரத சாந்தி ஹோமங்­கள் செய்து வழி­பட்­டார்.

மேலும் புகழ்பெற்ற தரு­ம­பு­ரம் ஆதீ­னத்­தில் ஆதீன குரு மகா சன்­னி­தா­னம் ஸ்ரீல­ஸ்ரீ மாசி­லா­மணி தேசிக ஞான­சம்­பந்த பர­மாச்­சா­ரி­யார் சுவா­மி­களை குடும்­பத்­தி­ன­ரு­டன் சந்­தித்து ஆசி பெற்­றார். இதை­ய­டுத்து அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"அதி­முக செயல்­ப­டா­மல் உள்­ளது. சசி­கலா வழக்கு நீதி­மன்­றத்­தில் உள்­ள­தால் அது பற்றி எனக்கு தெரி­யாது. டிசம்­பர் மாத கடை­சி­யில் கூட்­டணி குறித்து முடிவு எடுக்­கப்­படும்.

திமுக ஒன்­றரை ஆண்டு ஆட்­சி­யில் மக்­க­ளி­டம் வருத்­தத்தை சந்­தித்­துள்­ளது.

"அதை சரி செய்துகொள்­ள­வில்லை என்­றால் மோச­மான நிலை­யைச் சந்­திப்­பார்­கள். வரு­கிற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் திமு­கவை வீழ்த்­தும் கூட்­ட­ணி­யில் அம­முக இருக்­கும், மழை வெள்ளப் பாதிப்­பால் நிவா­ர­ணம் கிடைக்­கா­மல் பொது­மக்­கள் போராட்­டம் நடத்­து­வது திமுக விடி­யல் ஆட்­சி­யின் அவ­லங்­கள், மக்­களை ஏமாற்­றும் ஆட்­சி­யாக தமி­ழக அரசு உள்­ளது," என்று டி.டி.வி தின­க­ரன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!