செய்திக்கொத்து

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு

கெட்டுவிட்டது: பழனிசாமி

சென்னை: தமிழத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என ஆளுநர் ஆர். என் ரவியிடம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் ஆளுநரை அவர் சுமார் 30 நிமிடம் சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய 10 பக்க மனுவை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். புகார் மனுவில் கோவை சமையல் எரிவாயுத் தோம்பு வெடிப்பு, போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை, காற்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் விவகாரத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியம், பள்ளியில் பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் விவரமாக சுட்டிக்காட்டப்பட்டன.

எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.

திமுக செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அதன் தலைமை அறிவித்துள்ளது. திமுகவில் நீண்ட நாட்களாக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த க.அன்பழகனுக்கு நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதற்காக ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மங்களூரு குண்டுவெடிப்பு;

தமிழகத்தில் விசாரணை

நாகர்கோவில்: கர்நாடக மாநிலத்தின் மங்களூரு நாகுரி பகுதியில் இம்மாதம் 18ஆம் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்ததால் நாடு முழுவதும் அதிர்ச்சியலை ஏற்பட்டது, குண்டு வெடித்ததில் ஆட்டோவில் வந்த ஒருவரும், டிரைவரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆட்டோவில் காயத்துடன் மீட்கப்பட்டவன்தான் 'குக்கர்' குண்டு கொண்டு வந்தவன் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அவனைப் பற்றி விசாரித்ததில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 22 வயது ஷாரிக் என்ற முகமது ஷாரிக் என்பது கண்டறியப்பட்டது. அவனது கைபேசியைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் தனது அடை யாளத்தை மறைத்து செல்போனில் பிரேம்ராஜ் என்ற பெயரில் சிவன் 'ஸ்டேட்டஸ்' வைத்து பலருடன் பழகி உள்ளான். பல பெண்களுடன் அவன் பேசியிருப்பது தெரியவந்தது. மங்களூரு காவல்துறை நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இருக்கலாமா? அவன் தமிழகத்திலும் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டினானா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தற்போது ஷாரிக், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!