சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் அதிகரிப்பு

சென்னை: சென்னை விமான நிலை­யம், கொரோனா காலத்­திற்­குப் பிறகு வழக்க நிலைக்­குத் திரும்­பு­வ­தால் ஊழி­யர் எண்ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டுகிறது.

இத­னால் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்னை மீனம்­பாக்­கம் உள்­நாட்டு மற்­றும் பன்­னாட்டு விமான நிலை­யங்­களில் விமா­னங்­கள் தரை இறங்­கு­வது, புறப்­ப­டு­வது, விமானப் பய­ணி­க­ளின் உடைமை­களை கையாள்­வது போன்ற தரைத்­தள பணி­களை தற்­போது ஒரு தனி­யார் நிறு­வ­னம் கையாண்டு வரு­கிறது.

ஆனால் விமா­னச் சேவை­கள் தற்­போது இயல்­பு­நி­லைக்குத் திரும்பி உள்­ளன. இத­னால் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யும், விமா­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இதன் கார­ண­மாக தரைத்­தள பணி­களை ஒரே நிறு­வ­னம் சமா­ளிப்­பது சிர­ம­மாக இருந்­தது.

இந்த நிலை­யில் சென்னை விமான நிலை­யத்­தில் விமானச் சேவை பணி­க­ளுக்­காக புதி­தாக மேலும் 2 தனி­யார் முக­மை­களை இந்­திய விமான நிலைய ஆணை­ய­கம் நிய­மித்து உள்­ளது.

மும்பை, டெல்லி, ஐத­ரா­பாத், பெங்­க­ளூரு ஆகிய விமான நிலை­யங்­களில் பணி­க­ளைச் செய்து வரும் இரண்டு தனி­யார் முக­மை­களே சென்னை விமான நிலை­யத்­தி­லும் நிய­மிக்­கப்­பட்டு உள்­ளன.

புதிய நிறு­வ­னங்­க­ளி­டம் அதி நவீனக் கரு­வி­கள் மற்­றும் திற­மை­யான பணி­யா­ளர்­கள் இருப்­ப­தா­க­வும், இத­னால் சென்னை விமான நிலை­யத்­தில் விமா­னங்­கள் தரை இறங்­கு­வது, புறப்­ப­டு­வது போன்ற தரை­த்தள பணி­கள் இனி துரி­த­மாக நடை­பெ­றும் எனவும் எதிர்­பார்க்­கப்படு­கிறது.

புதிய ஊழி­யர்­கள் படிப்படி­யாக 2023 ஜன­வ­ரிக்­குள் பணி அமர்த்தப்­ ப­டவிருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!