லாரியில் மின்கம்பி: அதிக மின்சாரம் பாய்ந்து வீடுகளில் சாதனங்கள் சேதம்; ஆர்ப்பாட்டம்

பிரம்­ம­தே­சம்: விழுப்­பு­ரம் மாவட்­டம் பிரம்­ம­தே­சம் அடுத்த அரி­யந்­தாங்­கல் கிரா­மப்­ப­கு­தி­யில் செயல்­படும் 'புளூ மெட்­டல்ஸ்' என்­கிற தனி­யார் ஆலை­யில் இருந்து திண்­டி­வ­னம், மரக்­கா­ணம் உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு மணல், ஜல்லி, கல் ஆகி­யவை எடுத்­துச் செல்­லப்­ப­டு­வது வழமை.

இந்த நிலை­யில், சனிக்­கி­ழமை இரவு நேரத்­தில் அந்த ஆலைக்­குச் சென்ற ஒரு லாரி­யில் மின்­சா­ரக் கம்பி சிக்­கி­ய­தால் உயர் மின்­அ­ழுத்­தம் ஏற்­பட்டு வீடு­க­ளுக்­குத் திடீ­ரென்று மின்­சா­ரம் அதி­கம் பாய்ந்­தது.

இத­னால் சுமார் 350 வீடு­களில் தொலைக்­காட்சி, மின்­வி­சிறி, மின்­வி­ளக்கு, குளிர்­சா­தன கருவி உள்­ளிட்ட மின்­சா­த­னங்­கள் முழு­வ­தும் செய­லி­ழந்­து­விட்­டன.

இரவு முழு­வ­தும் மின்­சா­ரம் இன்றி தவித்த குடும்­பத்­தி­னர், பொழுது விடிந்­த­தும் காவல்­து­றை­யில் புகார் தெரி­வித்­த­னர். ஆனால் நட­வ­டிக்கை இல்­லா­ததை அடுத்து கெட்­டுப்­போன மின்­பொ­ருள்­க­ளைச் சாலை­யில் போட்டு அவர்­கள் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

பிரம்­ம­தே­சம் காவல் துறை­யி­னர் பேச்­சு­வார்த்தை நடத்தி உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்த பிறகு சாலை மறி­யல் கைவி­டப்­பட்­டது.

அறி­யந்­தாங்­கல் பகு­தி­யில் பல முறை நிகழ்ந்­துள்ள இப்­பி­ரச் சினைக்கு நிரந்­தர தீர்வு வேண்­டும் என்­றும் இழப்­பீடு வழங்க வேண்டும் என­வும் பொது­மக்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!