உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னை: எதிர்­வ­ரும் 5ஆம் தேதி அந்­த­மான் கடல் பகு­தி­யில் புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­குதி உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

இத­னால் தமி­ழ­கத்­தில் பர­வ­லாக மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக அம்­மை­யம் முன்­ன­றி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. கடந்த அக்­டோ­பர் மாதம் தொடங்­கிய பரு­வ­மழை, நவம்­ப­ரில் வலுப்­பெற்­றது. சீர்­காழி உள்­ளிட்ட சில பகு­தி­களில் நூறாண்­டு­களில் இல்­லாத வகை­யில் பலத்த மழை பெய்­தது.

இந்­நி­லை­யில், நவம்­பர் 3வது வாரத்­தில் வங்­கக்­கடலில் உருவான புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­குதி, பின்­னர் தாழ்வு மண்­ட­ல­மாக வலுப்­பெற்­றது.

இதன் கார­ண­மாக வட­மாவட்டங்­களில் பர­வ­லாக கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனி­னும் அச்­ச­ம­யம் வறண்ட காற்­றும் வீசி­ய­தால் மழை பெய்­ய­வில்லை. ஓரிரு இடங்­களில் லேசான மழை பெய்த நிலை­யில், அந்­தத் தாழ்வு மண்­ட­லம் ஆந்­திர கடல்­ப­கு­தி­யில் வலு­வி­ழந்­தது.

இந்­நி­லை­யில் டிசம்­பர் 5ஆம் தேதி அந்­த­மான் கட­லில் புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­குதி உரு­வா­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தாழ்­வுப் பகுதி, இந்­தி­யப் பெருங்­க­டல் வழி­யாக தமி­ழ­கத்தை நோக்கி நக­ரும் என்­றும் அடுத்த சில தினங்­களில் தமி­ழ­கத்­தில் கன­ம­ழைக்கு வாய்ப்­புள்­ளது என்­றும் வானிலை நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2016ஆம் ஆண்­டில் டிசம்­பர் 12ஆம் தேதி வர்தா புயல் சென்­னைக்கு அருகே கரை­யைக் கடந்­தது. அந்த நிகழ்­வுக்­கும் தற்­போது உரு­வாக உள்ள புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகு­திக்­கும் சில ஒற்­று­மை­கள் இருப்­ப­தாக நிபு­ணர்­கள் மேலும் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!