வளரும் நாடுகளின் நலனில் அக்கறை: இந்தியா உறுதி

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய 20 நாடுகளின் குழுவான ஜி20 அமைப்புக்கு இந்தியா நேற்று தலைமை ஏற்றுள்ளது என்றும் இந்தியத் தூதரக உறவுகள் வரலாற்றில் இது மிகச் சிறப்புமிக்க தருணம் என்றும் ஜி20 அமைப்பின் இந்தியக் குழுவின் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு தனது செயல்பாடுகளின் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க உதவும் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"ஜி20 அமைப்புக்குத் தலைமையேற்றுள்ள இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளது.

"பல்வேறு நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதில் செழுமையான வரலாறும் உலகிலேயே இளையர்களை அதிகம் கொண்ட நாடாகவும் திகழும் இந்தியா, உலகின் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்து உடனடித் தீர்வு காண வேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டுள்ளது.

"டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் இறுதி உச்ச மாநாட்டில், இதுவரை இல்லாத வகையில் 43 தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு பாலியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு இணங்க, இந்தியாவின் தலைமையானது அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியமிக்க, தீர்க்கமான செயல்பாடு சார்ந்ததாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது," என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்கும் தருணத்தில் பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம், பருவநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வதாக அமிதாப் காந்த் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவின் தலைமையில் பருவநிலை செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பருவநிலை நிதி, தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான எரிசக்தி மாற்றங்களை உறுதி செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனத் கூறியுள்ளார்.

"பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. 2047ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் டன் எனும் உற்பத்தி இலக்கை எட்டுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இதன்மூலம் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தை வரும் ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஓராண்டுக்குள் ஜி20 சார்ந்த 200 மாநாடுகளை 56 இந்திய நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!