நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல், அதையொட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இரு நாள்களுக்குப் பிறகு தமிழக கடல் பகுதியை நெருங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அச்சமயம் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று தொடங்கி ஐந்தாம் தேதி வரை தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தி லும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

அந்தமான் கடல் பகுதி களில் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது. 8ஆம் தேதிக்குப் பிறகு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!