கழிப்பறை கழுவிய மாணவர்கள்: தலைமை ஆசிரியை கைது

புத்தகங்களை எடைக்குப் போட்ட மற்றொரு தலைமை ஆசிரியை

பெருந்­துறை: ஈரோடு மாவட்­டம் பெருந்­துறை ஒன்­றி­யம் துடுப்­பதி ஊராட்சி பாலக்­க­ரை­யில் உள்ள அரசு தொடக்­கப்­பள்­ளி­யில் 35 மாணவ, மாண­வி­கள் படித்து வரு­கின்­ற­னர்.

இங்கு இரு கழிப்­ப­றை­கள் உள்­ளன. இந்­நி­லை­யில், மாண­வர் ஒரு­வர் காய்ச்­ச­லால் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். பள்­ளிக்­கூட கழிப்­ப­றை­யைச் சுத்­தம் செய்­த­போது கொசு கடித்­த­தாக அந்த மாண­வர் கூறி­ய­தைக் கேட்டு பத­றிய அவ­னது தாய் ஈரோடு மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் புகார் அளித்­தார்.

அதி­கா­ரி­கள் நடத்­திய விசா­ர­ணை­யில், பள்­ளி­யில் படிக்­கும் 6 மாண­வர்­களை தலைமை ஆசி­ரியைச் கழிப்­ப­றையை சுத்­தம் செய்ய வைத்­தது தெரி­ய­வந்­தது. விசா­ர­ணை­யைத் தொடர்ந்து தலைமை ஆசி­ரியை கீதா­ராணி (படம்) தலை­ம­றை­வா­னார்.

இதற்­கி­டையே, மாண­வ­ரின் தாய் பெருந்­துறை காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­தார். குழந்­தை­கள் உரிமை, பாது­காப்­புச் சட்­டம் உட்­பட 4 சட்டப் பிரி­வுகளின்கீழ் வழக்­குப்­ப­திவு செய்து தலைமை ஆசி­ரி­யையை தேடி வந்­த காவல் துறையினர் பெருந்­து­றை­யில் உள்ள உற­வி­னர் ஒரு­வர் வீட்­டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்­த­னர்.

இந்­நி­லை­யில், தேனி மாவட்­டத்தில் பள்ளி தலைமை ஆசி­ரியை ஒரு­வர் இடை­நீக்­கம் செய்­யப்­பட்டுள்­ளார். கட­ம­லைக்­குண்டு அருகே காம­ரா­ஜ­பு­ரம் கிரா­மத்­தில் ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப்­பள்ளி தலைமை ஆசி­ரி­யை­ ஈஸ்­வரி.

இப்­பள்­ளி­யிலிருந்த250 கிலோ பழைய பாடப்­புத்­த­கங்­களை மாவட்ட அனு­ம­தி­யின்றி ஈஸ்­வரி விற்­பனை செய்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. விசார ணையின்போது உண்­மையை ஒப்புக்கொண்ட தலைமை ஆசி­ரியை ஈஸ்வரி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!