நான்கு கணவர்களின் மோசடி மனைவி கைது

தாம்­ப­ரம்: நகை, பணத்­துக்கு ஆசைப்­பட்டு நான்கு ஆட­வர்­களை மணம் புரிந்து ஏமாற்­றி உள்ளார் ஒரு பெண்.

மது­ரை­யைச் சேர்ந்த அபி­நயா, 28, (படம்) 10ஆம் வகுப்புப் படித்­து உள்­ளார்.

2011ல் மன்­னார்­

கு­டி­யைச் சேர்ந்த விஜய் என்­ப­வ­ரு­டன் முறைப்­படி அபி­ந­யா­வுக்குத் திரு­ம­ணம் நடந்­தது. அவ­ரு­டன் சில மாதங்­கள் மட்­டுமே வாழ்ந்த அவர், 2013ல் செந்­தில்­கு­மார் என்­ப­வரை இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­தார். இவர்­க­ளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்­தது.

பின்னர், செந்­தில்­கு­மா­ரைப் பிரிந்து 2020ல் ஆட்டோ ஓட்­டு­

ந­ரான பன்­னீர்­செல்­வம் என்­ப­வரை திரு­ம­ணம் செய்­தார்.

அவ­ரு­டன் 10 நாள்கள் வாழ்ந்த அபி­நயா, நான்­கா­வ­தாக தாம்­ப­ரத்­தைச் சேர்ந்த நட­ரா­ஜனை திரு­

ம­ணம் செய்தார். அவருடன் ஒன்­றரை மாதங்­கள் வாழ்ந்து, நகை, பணத்­து­டன் தலை­ம­றை­வா­னார்.

பல­ரி­டம் ஏமாற்­றிய நகை­களை இரண்­டா­வது கண­வர் செந்­தில்­கு­மா­ரு­டன் சேர்ந்து மது­ரை­யில் தனி­யார் நிறு­வ­னத்­தில் அடகு வைத்து அதன் மூலம் கிடைக்­கும் பணத்தை வைத்து இரு­வ­ரும் உல்­லா­ச­மாக வாழ்ந்து வந்­துள்­ள­னர்.

திரு­ம­ணம் செய்­யா­ம­லும், மோசடி செய்யும் நோக்குடன் சில­ரு­டன் அபி­நயா வாழ்ந்­துள்­ளார்.

நான்­கா­வது கண­வர் நட­ரா­ஜனை ஆகஸ்ட் 29ஆம் தேதி திரு­ம­ணம் செய்த அபி­நயா, அக்­டோ­பர் 19ஆம் தேதி இரவு திடீ­ரென மாய­மா­னார்.

வீட்­டில் இருந்த 15 சவ­ரன் நகை, 20 ஆயி­ரம் ரூபாய் ரொக்­கம் ஆகி­ய­வற்­று­டன் அவர் தலை­

ம­றை­வா­னது தெரிய வந்­தது.

நட­ரா­ஜன் அளித்த புகா­ரின்­

பே­ரில் தாம்­ப­ரம் காவல்­துறை அதி­கா­ரி­கள் அபி­ந­யா­வை­யும் செந்­தில்­கு­மா­ரை­யும் கைது செய்த­னர். அவர்­ க­ளி­டம் இருந்து 3 சவ­ரன் நகை­களும் 74 ஆயி­ரம் ரூபாய் பண­மும் மீட்­கப்­பட்டுள்­ள­தாக காவல்­து­றை­ யி­னர் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!