பூர்வீக வீட்டை கல்விக்கூடமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி

பூர்வீக வீட்டை கல்விக்கூடமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி

1 mins read
5893f4eb-e9c5-4c83-b274-405d3ca5aae1
-

ஈரோடு: தனது பூர்­வீக வீட்டை கல்­விக்­கூ­ட­மாக மாற்றி, அங்கு போட்­டித் தேர்­வு­க­ளுக்­கான பயிற்சி வகுப்­பு­களை நடத்தி வரும் மது­ரை­யைச் சேர்ந்த ஐஏஎஸ் அதி­காரிராஜ­மா­ணிக்­கத்­துக்­குப் பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.

அவ­ரது இந்த முயற்­சி­யால் நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்­கள் பய­ன­டைந்து வரு­கின்­ற­னர்.

திரு­வா­த­வூ­ரைச் சேர்ந்த ராஜ­மா­ணிக்­கம் குடி­மைப்­ப­ணித் தேர்­வில் தேர்ச்சி பெற்­ற­தும் கேரள மாநி­லம், திருச்­சூ­ரில் உதவி ஆட்சி­ய­ராக தனது பணி­யைத் தொடங்­கி­னார். பிறகு அம்மாநிலத்­தின் பல்­வேறு துறை­களில் அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்றி நன்­மதிப்பைப் பெற்­றார்.

மூணாறு மாவட்ட உதவி ஆட்­சி­ய­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் அரசு நிலத்தை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தது தொடர்­பாக ராஜ­மா­ணிக்­கம் மேற்­கொண்ட துணிச்­ச­லான நட­வ­டிக்­கை­கள் கேரள மக்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்­பைப் பெற்­ற­ன. இதன் மூலம் ஆறா­யி­ரம் ஏக்­கர் நிலத்தை மீட்­டெ­டுத்­தார் ராஜ­மா­ணிக்­கம்.

இந்­நி­லை­யில் திரு­வா­த­வூ­ரில் தனது பெற்­றோர் வசித்த பூர்­வீக வீட்டை ஏழை மாண­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் கல்­விக்­கூ­ட­மாக மாற்றி உள்­ளார். அங்கு அரசு உயர் பத­வி­க­ளுக்­காக நடத்­தப்­படும் போட்­டித் தேர்­வு­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக இல­வ­ச­மாக எழுத்­துத் திறன், ஓவி­யம், சிலம்­பம், வளரி, யோகா, தையல், தட்­டச்சு உள்­ளிட்ட 12 வகை­யான பயிற்­சி­களை வழங்கி வரு­கி­றார் ராஜ­மா­ணிக்­கம்.

மேலும், இந்த ஆண்டு முதல், பள்ளி மாண­வர்­க­ளுக்­கான கோடை­கால விடு­மு­றைத் திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­களும் அளிக்­கப்­ப­டு­கிறது. பயிற்­சிக்­குத் தேவைப்­படும் பொருள்­க­ளை­யும் இந்­தக் கல்­விக்­கூ­டமே இல­வ­ச­மாக வழங்­கு­கிறது. கல்­விக்­கூடத்தை ராஜ­மா­ணிக்கத்தின் நண்­பர்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் நிர்­வகிக்­கின்­ற­னர்.