மதுரையில் அனைத்துலக விமான நிலையம்: ஸ்டாலின் கோரிக்கை

திருச்சி: தமிழகத்தின் கோரிக்கை மக்களுக்கானது அது அரசியல் முழக்கமல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மதுரை விமான நிலையத்தையும் அனைத்துலக விமான நிலையமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாகும். பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும், ஏராளமான மக்கள் நாள்தோறும் மதுரை வந்து செல்வதால் மதுரையை அனைத்துலக விமான நிலையமாக்க வேண்டும் என்றார் அவர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை - பினாங்கு, சென்னை - தோக்கியோ இடையே நேரடி விமானச் சேவையை தொடங்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனே நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றார் அவர்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளை செய்து தரும் முக்கிய கடமை மாநில அரசுக்குத்தான் உள்ளது. நெடுஞ்சாலை துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரினார்.

திருச்சி பெல் நிறுவனத்தை நம்பி இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து உள்ளது - இதனை கருத்தில் கொண்டு பிரதமர் பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சிறு, குறு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!