சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு

புதுடெல்லி: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்கப்பட்டுள்ளது. எட்டு நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து வெற்றியின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்காக வெற்றியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக நாளேடு ஒன்று தெரிவித்தது.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, 45, கடந்த சில நாள்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்துக்கு தனது நண்பா் கோபிநாத் என்பவருடன் சென்றாா்.

பிப்ரவரி 4ஆம் தேதி இமாசல மாநிலத்தில் உள்ள கசாங் நளா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காா் ஓட்டுநா் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெற்றியின் நண்பர் கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்த கறை, திசுக்களை சேகரித்த காவல்துறையினர் அதை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!