கடற்கரையில் விரட்டியடிக்கப்படும் பொதுமக்கள்

கடற்கரையில் விரட்டியடிக்கப்படும் பொதுமக்கள்

1 mins read
0552d90a-302f-44a5-8c31-9df207f4af29
மெரீனா கடற்கரை. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: கோடை வெயில் காரணமாக, சென்னை கடற்கரைப் பகுதியில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு கடற்கரைக்கும் பூங்காக்களுக்கும் வருவோரை காவல்துறை விரட்டி அடிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக காவல்துறை தலைவர், சென்னை காவல் ஆணையர் ஆகிய இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை கடற்கரையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேல் பொதுமக்கள் கூடும்போது காவல்துறையினர் மேற்கொண்டு யாரையும் அனுமதிப்பதில்லை. இதனால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கடற்கரை