35 தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்த இலங்கை

35 தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்த இலங்கை

1 mins read
1525fc49-6f0d-4c0e-b65e-dbec92554e88
மாதிரிப்படம்: - ஊடகம்
Google News Preferred Icon

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரின் காவலை செப்டம்பர் 4ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கையின் புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டுப்படகுகளில் கடலுக்குச் சென்ற அந்த 35 பேரையும் இம்மாதம் 8ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைதுசெய்தது.

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மீனவர்களுடன் தமிழக அரசு தரப்பில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கடலுக்குச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்