எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் காலமானார்

1 mins read
2654df8f-20b7-4e9f-aac3-35eccf40f259
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். - படம்: ஊடகம்

பிரபல எழுத்தாளரும் ஆன்மிகச்சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்தர்ராஜன் காலமானார். அவருக்கு வயது 66.

இந்திரா செளந்தர்ராஜன் மதுரையில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.

குறிப்பாக, மர்மம், பேய், அமானுஷ்யம் சார்ந்த கதைகளை எழுதுவதில் வல்லவர்.

‘மர்ம தேசம்’, ‘என் பெயர் ரங்கநாயகி’, ‘விடாது கருப்பு’, உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன.

நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர்.

மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தபோது உயிரிழந்தார்.

சனிக்கிழமை நள்ளிரவு பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இந்திரா சவுந்தர்ராஜன் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்