தீமிதித் திருவிழா

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு இடம்பெற்ற அதே முழு ஊர்வலத்துடன் தீமிதித் திருவிழா நிறைவுபெற்றது. ஆழ்ந்த இறைநம்பிக்கையுடனும் ஆயிரம் தொண்டூழியர்களின் உதவிக்கரங்களைப் பிடித்துக்கொண்டும் ஏறத்தாழ 3,500 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) மாலை பூக்குழியைக் கடந்து இறைதரிசனம் செய்தனர்.
இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் முதல் நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது. பின்னர் எவர்ட்டன் பார்க் பல்நோக்கு மண்டபம், ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, புக்கிட் பெர்மாய் புளோக் 109, தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 29 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு வாக்கில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
தீமிதித் திருவிழாவுக்கும் அதற்கு முந்தைய நேர்த்திக்கடன்களான பால்குடம், மாவிளக்கு,
அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், ஆகியவற்றுக்கும் இணையப் பதிவு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கவிருக்கிறது.