மின்னியல்

சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும்.
மக்களின் மின்னியல் சார்ந்த வாழ்க்கை முறையைப் பாதுகாக்க, ‘கிளவுட் சேவை‘ மற்றும் கணினியில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, செயல்பாடு போன்ற சேவைகள் வழங்கும் மையங்கள் விரைவில் திருத்தப்படவுள்ள சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு சட்டத்தன் கீழ் செயல்பட வேண்டும்.
லண்டன்: நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மிகவும் தாமதமாக மாறினால், எரிவாயு பயன்படுத்தும் வாகனங்கள் அங்கு குவிந்துபோவதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று கார்பன் டிராக்கர் என்ற கரியமிலவாயு கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாத விடுமுறையின்போது சிங்கப்பூரிலுள்ள 10 விரைவுச்சாலைப் பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) $1 குறையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
மின்னியல் துறை குறிப்பாக பகுதி மின்கடத்திகளின் தேவை மீண்டிருப்பதால், ஓராண்டு கால சரிவுக்குப் பிறகு உற்பத்தித் துறை மீட்சி காணும் என்ற நம்பிக்கையை செப்டம்பர் மாத உற்பத்தி புள்ளி விவரங்கள் தந்துள்ளன.