கல்வி உதவித் தொகை

தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ) மாணவர்கள், சிங்கப்பூர் மேபேங்க், ஓசிபிசி, ஜேபிமோர்கன் போன்ற நிறுவனங்களுடன் நிதித் துறையில் வேலைப் பயிற்சி வாய்ப்புகளுடன் கூடிய உபகாரச் சம்பளத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.
பள்ளியில் சிறந்து விளங்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகை, பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் தமிழர் சங்கம் நடத்திய 74வது பொங்கல் விழாவில் அறிமுகமானது.
சிங்கப்பூரின் கல்வி முறை பலரை ஈர்க்கும் ஒன்றாக, ஆனால் எளிதில்லாத ஒன்றாக உள்ளது.
மிகவும் வசதி குறைந்த, $1,100 வெள்ளி வரையிலான தனிநபர் மாத வருமானம் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் பட்டக்கல்வி பயிலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து அந்தப் பல்கலைக்கழகம் ஏற்கும்.