நிலப் போக்குவரத்து ஆணையம்

செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் உலகத் தரத்தில் இல்லை என எழுந்த குற்றச்சாட்டுகளை நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) மறுத்துள்ளது.
சாலை எதிர்த்திசையில் வாகனங்கள் வராதபோது ஓட்டுநர்கள் வலதுபுறமாகத் திரும்பக்கூடிய சாலைச் சந்திப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துவருகிறது.
சிங்கப்பூரின் பொதுப் பேருந்துக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கு 175 மில்லியன் வெள்ளி மதிப்புக்கும் மேலான குத்தகைகள் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சினியரிங் (எஸ்டி எஞ்சினியரிங்) குழுமத்தின் நகரத் தீர்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை புதிய இஆர்பி கருவி வாகனத்தில் ஓட்டுநர் ஒருவர் தனது காலிருக்கும் பகுதியில் பொருத்திக்கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு வாகனத்தில் ஓட்டுநர் கால் வைத்திருக்கும் பகுதி அதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.