பால ராமர்

கர்நாடகா: அயோத்தி பால ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த கர்நாடக விவசாயி, அக்கல்லை அயோத்திக்கு கொண்டு சேர்த்த குவாரி குத்தகைதாரர் இருவருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராமர் சிலையை அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடித்துள்ளார்.
அயோத்தி கோயிலில் உள்ள ராமரை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். ஒரு நாளைக்கு 300,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரம்மாண்ட வடிவமைப்பு, பிரத்யேகமான கலை நுணுக்கங்களுடன் எழுந்து நிற்கும் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக இந்தியாவிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கோடி கோடியாக நன்கொடையளித்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ராமர் திங்கட்கிழமை எழுந்தருளினார்.