You are here

இளையர் முரசு

பாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா

ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதுடன் அதில் ஈடுபட்டு பார்க்கவும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்த் திருவிழா.

பார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு

பல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில், நம் அன்றாட வாழ்வுக்கும் நமக்கு நெருக்கமான வர்களுக்கும் எதிர்காலத்தில் எம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? என்பதை ‘கடல்’ குறும்படம் விவரிக்கும்.

நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியிலிருந்து அண்மையில் பட்டயம் பெற்ற தமிழ் மாணவர் களால் தயாரிக்கப் பட்டிருக்கும் ‘கடல்’ எனும் குறும்படம், இரண்டாவது முறையாக நடை பெறும் ‘தெமாசெக் 20/20’ என்ற குறும்படப் போட்டியில் இடம் பெற்றுள்ள படைப்புகளில் ஒன் றாகும்.

பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்

எஸ்.வெங்கடேஷ்வரன்

பொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93 மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். “தற்போது கல்வி நிதி உதவி பெற்றவர்கள், எதிர்கால பொதுச் சேவை அதிகாரிகள் ஆவார்கள். இவர் கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவ மைத்து நம் நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்துவார்கள். சிங்கப்பூர் சீரும் சிறப்புமாக இருக்க, நமக்குப் பல துறை களில் திறமைசாலிகள் வேண்டும்.

ஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்

ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்

சிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு "டஸ்க் டில் டான்" எனும் இசைக் காணொளியைத் தயாரித்துள்ளனர் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். தெமாசெக் 20/20 போட்டியில் பங்கேற்ற நான்கு உயர்நிலைப் பள்ளி குழுக்களில் இவர்களது குழுவும் அடங்கும். உள்ளூர் மேடை நாடக மற்றும் திரைப்பட இயக்குநரான சலீம் ஹாடியின் மூலம் இந்த வாய்ப்பைப் பற்றி அறிந்தார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியரான திருமதி லட்சுமி.

‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’

அண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப் பங்காற்றினார் திரு கணேஷ். ‘ஹீலியம்’ பலூன் மூலம் ஒரு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்த முயற்சி ‘இன்.ஜீனியஸ்’ என்ற நிறுவனத்தால் இவ்வாண்டு மே 15ஆம் தேதி மேற்கொள்ளப் பட்டது.

மனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்

எஸ். வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’ எனும் உள் ளூர் திட்டம். அதில் பொறி யாளராகப் பணியாற்றி வருகி றார் விமானங்கள் மீதும் விண் வெளித் துறை மீதும் அதிக ஆர்வம்கொண்ட 26 வயது திரு பூ.கணேஷ் (படம்).

நல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை

ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்

வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருந்தா லும், முக்கியமான பண்புகளை மேம்படுத்துவது, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது போன்ற திறன்கள் அவர்களை நல்ல தலைவர்களாக்கும் என்று டிபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா கூறியுள்ளார். சென்ற மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற சிண்டா இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற சுமார் 90 மாணவர் களிடையே கலந்துரையாடியபோது இந்தக் கருத்தை திரு குப்தா பகிர்ந்துகொண்டார்.

10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்

ப. பாலசுப்பிரமணியம்

நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில் முன்னேறிவிடும் என்ற எண்ணத்தில் மாஸ்கோ வின் லுஸ்னிக்கி அரங்கில் ‘குரூப் எஃப்’ ஆட்டத்திற்காக காத்திருந் தார் 27 வயது விக்னராஜ் ராஜேந்திரன். அடுத்த 90 நிமிடங்களுக்கு என்ன நடக்குமென்று அவர் எதிர் பார்த்தாரோ அது நடக்கவில்லை. மெக்சிகோவின் அதிரடித் தாக் குதல்கள் ஜெர்மானிய தற்காப்பு ஆட்டக்காரர்களைத் திக்குமுக் காட வைத்தது.

Pages