You are here

இளையர் முரசு

நீண்டநாள் கனவு நனவானது

எஸ்.வெங்கடேஸ்வரன்

மருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால், பதின்மவயதில் ரத்தத்தைப் பார்க்கும்போது தமக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக மருத்துவராக முடியாது என்றே அவர் முடிவு செய்திருந்தார். டாக்டர் ஐஸ்வர்யா ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் படித்தபோது அவரது சகோதரிக்குச் சிறு காயம் ஏற்பட்டது. அதில் ரத்தக் கசிவைப் பார்த்து ஐஸ்வர்யாவுக்கு லேசான மயக்கம் வந்தது. இதனால் தமக்கு ரத்தத்தைப் பார்த்தால் பயம் வரும் என்பதை உணர்ந்து மருத்துவர் ஆகும் விருப்பத்தை ஐஸ்வர்யா கைவிட்டார்.

பட்டயக் கல்வி: 3.94 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்ற பாலாஜி

சாதாரண நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தொடக்கக் கல் லூரிக்குச் செல்லத் தகுதி பெற்றபோதிலும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘பயோ மெடிக் கல்’ அறிவியல் துறையில் பயின்றார் 21 வயது பாலாஜி ஸ்ரீனிவாசன். தமது கடின உழைப்புக்குப் பலனாக 3.94 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்று இம்மாதம் பட்டயச் சான்றி தழைப் பெற்றார்.

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்ற ஷோபனா

சிறு வயதிலிருந்தே கடல், மீன்கள் ஆகியவை தொடர்பாக மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள 19 வயது மோ.ஷோபனா ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்றுள்ளார். அவரது படிப்பின் ஒரு முக்கிய அங்கமாக சீனாவில் ‘ஓ‌ஷியனஸ்’ குழுமத்தில் அனுபவக் கல்வி பெற்றார். ஆரம்பத்தில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோதிலும் இரண்டு மாதங்களிலேயே சீனமொழியைக் கற்றுக்கொண்டார்.

3.83 புள்ளிகளுடன் பட்டயம் கௌதம் புஷ்பநாதன்

சாதாரண நிலை தேர்வில் சிறப்பாக செய்வில்லை என்ற போதிலும் ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியில் விடாமுயற்சியுடன் படித்து இயந்திரத்தொழில் செயற் பாடுகள் நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார் கௌதம் புஷ்பநாதன், 20. அவர் 3.83 புள்ளிகளுடன் பட்டயம் பெற்றுள்ளார். வேலை அனுபவக் கல்விக்காக அவர் மியன் மாரில் இருக்கும் ‘டரென்ஸ் டிசைன் ஃபர்னிஷ்ங்’ நிறுவனத்துடன் 20 வாரங் களுக்கு நிபுணராகப் பணி புரிந்து சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பல்வேறு திறன்களைக் கொண்டவராக இருப்பது முக்கியம். அதற்குச் சான் றாக கௌதம் அனைத் துலகத் தொழில் துறையில் இன்னொரு சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இளம் கவிஞர்களை ஊக்குவித்த ‘இளம்பிறை’

மா.பிரெமிக்கா

இளையர்களை, வளர்ந்துவரும் கவிஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களது படைப்புகளை மேடை ஏற்றவும் வாய்ப்பளித்தது தமிழ் மொழி விழாவையொட்டி நடந்த ‘இளம்பிறை’ கவிதை வாசிப்பு நிகழ்ச்சி. தேசிய நூலக வாரியத் தின் இளையர் எழுத்தாளர் வட் டத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 20ஆம் தேதி தேசிய நூலக வாரி யத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

ஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு

பள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்து மாணவர் களைத் தமிழ்மொழியால் இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தில் உறுப்பினர் களாக இருந்த முன்னாள் மாணவர்கள் இணைந்து ‘என்டியு டிஎல்எஸ் முன்னாள் மாணவர்சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளனர். நன்யாங் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

‘இளமைத்தமிழ்.காம்’

மாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில் இளையர்களை இணைப்பதில் கவனத்தை செலுத்திவரும் இந்த அமைப்பு, கதை, கட்டுரை, கவிதை, புகைப்படம், காணொளி ஆகிய ஐந்து பிரிவுகளில் மாதந் தோறும் போட்டிகளை நடத்துகிறது. ஆண்டு முழுவதும் மாணவர் கள் தமிழில் தொடர்ந்து பங்களிக்க இது வகைசெய்கிறது. “மாணவர்கள் தங்கள் படைப்பு களைத் தமிழில் தட்டச்சு செய்து சமர்ப்பிக்கின்றனர்.

Pages