You are here

இளையர் முரசு

அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு பிரியாணி சமைத்துப் பரிமாறினார் பால் சைமன்

சுதாஸகி ராமன்

சிறிய கற்றல் குறைபாடு இருந்தாலும் சமையல் கலையில் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதியுடன் செயல்பட்ட இளையர் இஸ்தானா வரை சென்று அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு அண்மை யில் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார். நாட்டின் அதிபருக்கு உணவு சமைத்துப் பரிமாறுவதைத் தமது நீண்ட நாள் கனவாக வைத்திருந்த 26 வயது சமையல் வல்லுநர் பால் சைமனுக்குக் கடந்த மாதம் 24ஆம் தேதி அந்த வாய்ப்புக் கிட்டியதில் அளவில்லா மகிழ்ச்சி.

மொழியோடு கலை, விளையாட்டு கற்பித்த தமிழ்மொழி கற்றல் விழா

பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம் பாட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று தமிழர் பாரம்பரியத்தின் பல விதமான கூறுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள இளையர்களுக்கு அண்மையில் வாய்ப்பு கிட்டியது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் விழாவில், தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை இரண்டு ஆகிய வற்றில் பயிலும் மாணவர்கள் இந்த நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு தமிழ்க் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டனர்.

சொற்களத்தில் விவாதப்போர்

மக்கள் கழக நற்பணிப் பேரவை, மத்திய வட்டார 30 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து ‘சொற்களம்’ எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர் களுக்கான தமிழ் விவாதப் போட்டியைத் தொடங்கியுள்ளன. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி களுக்கு மொத்தம் 30 பள்ளிகள் இவ்வாண்டு பதிவுசெய்துள்ளன. முதல் சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி பெண்டமியர் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன. ‘சிங்கப்பூரர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்’ எனும் தலைப்பு முதல் சுற்றில் வழங்கப்பட்டது. தலைப்பை ஒட்டியும் வெட்டியும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் கள் விவாதித்தனர்.

தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டிகள்

தமிழர் பேரவை, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய வற்றின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டி கள் (TED) முதன்முறையாக தமிழில் நடத்தப்படவுள்ளன. பள்ளிகளைப் பிரதிநிதித்து மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிக்கு பதிவுசெய்ய இறுதி நாள் இம்மாதம் 22ஆம் தேதி. பள்ளிகள் வழியாகப் பதிவுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற் பதற்கு மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்கில் அறிமுகப் பயிலரங்கு இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்படும்.

பயிற்சிகளுக்கு அப்பால் மனிதாபிமான உதவி

ப. பாலசுப்பிரமணியம்

ஆகாயப் படையில் சேவையாற்றும் எம்இ3 அதிகாரி சுரேஷ் மணியம் 2005ஆம் ஆண்டை எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில், அவர் திருமணம் புரிந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியா வின் பண்டார் அச்சேவுக்கு துயர்துடைப்புப் பணிக்காக அவர் செல்ல வேண்டி இருந்தது.

தன் திருமணத்தை அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் செய்யத் திட்டமிட்டிருந்தார் சுரேஷ். வருங் காலத் துணைவியார், இரு தரப்புக் குடும்பத்தார் ஆகியோரிடம் சூழ்நிலையை விளக்கினார் அவர். 2005ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் அவரது திருமணம் நடை பெற்றது.

சிறந்த இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

வில்சன் சைலஸ்

‘பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காஸ்மிக் கதிர் வீச்சு சிங் கப்பூரையும் தாக்கவிருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு கைபேசி களை அணைத்து வைப்பது நல்லது’ என்ற செய்தி 24 வயது கிஷனைப் பெரிய அளவில் பாதித்தது. சமூக ஊடகங்களில் வெளி யான அந்தச் செய்தியை அவசர மாக மற்றவர்களுக்கும் பகிர்ந்த துடன் கதிர்வீச்சு பாதிப்பைத் தவிர்க்க மும்முரமாகத் தயாரான கிஷனுக்கு அது பொய்யான தகவல் என்பது பின்னர் தெரிய வந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் சாதிக்க இலக்கு

முஹம்மது ஃபைரோஸ்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு பயிற்சி மேற் கொண்டிருந்தபோது தோள்பட்டை யில் ஏற்பட்ட மோசமான காயத்தால் 24 வயது முஹம்மது ஹனுர்டீன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு குத்துச்சண்டைப் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக நிகழ்ந்தது.

பண்பாட்டை விதைத்த கொண்டாட்டம்

அஷ்வினி செல்வராஜ்

நாள் தவறாமல் வாசல் தெளித்து கோலம் போடும் தாயாரின் செயலுக்கான கார ணத்தை அண்மையில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது அறிந்துகொண் டார் எட்டு வயது வைஷ்ணவி ராஜேஷ். இவரைப் போன்ற தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஏறக்குறைய 30 பேர் தமிழ்க் கலாசாரம் குறித்த சுவாரசியமான தகவல் களைப் பொங்கலுக்கு முதல்நாள் நடை பெற்ற ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டனர். தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை அமைப்பு புதிதாக இந்த ஆண்டு தொடங்கியுள்ள சமூக சேவைத் திட்டத் தின் ஒரு பகுதியாக கடந்த 13ஆம் தேதி ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

Pages