You are here

இளையர் முரசு

களைகட்டும் தமிழ்மொழி விழா

சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறும் தமிழ்மொழி விழாவின் அதிகார பூர்வ தொடக்க நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தேறியது. தமிழ்மொழி விழாவில் இளையர்களுக்கான நிகழ்ச்சி களும் இடம்பெறுகின்றன. இளையர்களிடையே தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரிப் பதற்கான முயற்சியாக இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன. இளையர்களுக்காக நடத்தப்பட இருக்கும் சில நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

‘ஈட்டிகோ’- கழிவு விலையில் அறுசுவை உணவு

உள்ளூரில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மூலம் சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உணவகங் களில் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் கழிவு விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் 10% முதல் 50% விழுக்காடு வரை உணவு விலையில் கழிவு கிடைக்கும். இந்த செயலியில் இந்திய உணவகங்கள் உட்பட சுமார் 3,000க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட உணவகங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதோடு, உணவகத்தைப் பற்றியும் உணவின் தரத்தைப் பற்றியும் செயலியில் மதிப்பீடு செய்யலாம். பலவகையான உணவு, உணவகத் தெரிவுகளை இந்தச் செயலி வழங்குகிறது.

ஸ்மியூல்: நீங்களும் பாடகராகலாம்

இசையையும் பாடல்களையும் பிடிக்காதோர் அரிது. மனதுக்குப் பிடித்த ‘காரவோக்கே’ பாடல் களைப் பாடுவதற்கு இனிமேல் கேளிக்கைக் கூடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. தமிழ் உட்பட பல மொழிகளில் ‘கராவோக்கே’ பாடல்களை ‘ஸ்மியூல்’ செயலி மூலம் உல கெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து பாடமுடியும். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, கனடா போன்ற பல நாடுகளில் இந்தச் செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது.

சொந்த அனுபவம் கல்வியில் பெற்றுத் தந்த வெற்றி

உடல்நலக்குறைவு காரணமாக தமது தாத்தா அடிக்கடி மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருந்த போது அங்கு அதிக நேரம் செலவழித்த 25 வயது பிரபு தனபாலன், நோயாளிகளுக்கு சொட்டுச் சொட்டாக ஏற்றப்படும் ‘குளுகோஸ்’ திரவ கருவியை தாதியர்கள் பலமுறை வந்து சோதனை செய்வதைக் கண்டார். திரவம் தீர்ந்துவிட்டதா என்பதை அறிவதற்கு தாதியர்கள் அவ்வாறு செய்தனர் என்பதை அவர் உணர்ந்தார். மேலும், திரவம் தீர்ந்துவிட்டால் அந்தக் கருவி எழுப்பும் ஒலி, அறையில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் இடையூறாக இருந்துள்ளது.

சமையற்கலை விருப்பம் வாழ்க்கைத் தொழிலானது

ப. பாலசுப்பிரமணியம்

சுமார் 10 ஆண்டுகளாக கணினி விசைப்பலகையும் கையுமாக இருந்த குமாரி அகத்தா உதே‌ஷிணி சேவியரின் கரங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘கேக்’ மாவைப் பிசைவதில் பக்குவமாகியுள்ளன. இது அவர் தொழில்முனைவராக விரும்பிய தால் ஏற்பட்ட மாற்றம். லண்டனின் பிரசித்திபெற்ற இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனில் ரசாயனப் பொறியல் துறை பட்டம், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில்’ நிதித் துறை முதுகலை பட்டம் என கல்வியில் சிறங்தோங்கி ஓர் ஐரோப்பிய வங்கியில் இவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். செய்யும் வேலை பிடித்திருந் தது.

அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு பிரியாணி சமைத்துப் பரிமாறினார் பால் சைமன்

சுதாஸகி ராமன்

சிறிய கற்றல் குறைபாடு இருந்தாலும் சமையல் கலையில் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதியுடன் செயல்பட்ட இளையர் இஸ்தானா வரை சென்று அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு அண்மை யில் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார். நாட்டின் அதிபருக்கு உணவு சமைத்துப் பரிமாறுவதைத் தமது நீண்ட நாள் கனவாக வைத்திருந்த 26 வயது சமையல் வல்லுநர் பால் சைமனுக்குக் கடந்த மாதம் 24ஆம் தேதி அந்த வாய்ப்புக் கிட்டியதில் அளவில்லா மகிழ்ச்சி.

மொழியோடு கலை, விளையாட்டு கற்பித்த தமிழ்மொழி கற்றல் விழா

பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம் பாட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று தமிழர் பாரம்பரியத்தின் பல விதமான கூறுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள இளையர்களுக்கு அண்மையில் வாய்ப்பு கிட்டியது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் விழாவில், தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை இரண்டு ஆகிய வற்றில் பயிலும் மாணவர்கள் இந்த நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு தமிழ்க் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டனர்.

சொற்களத்தில் விவாதப்போர்

மக்கள் கழக நற்பணிப் பேரவை, மத்திய வட்டார 30 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து ‘சொற்களம்’ எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர் களுக்கான தமிழ் விவாதப் போட்டியைத் தொடங்கியுள்ளன. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி களுக்கு மொத்தம் 30 பள்ளிகள் இவ்வாண்டு பதிவுசெய்துள்ளன. முதல் சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி பெண்டமியர் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன. ‘சிங்கப்பூரர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்’ எனும் தலைப்பு முதல் சுற்றில் வழங்கப்பட்டது. தலைப்பை ஒட்டியும் வெட்டியும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் கள் விவாதித்தனர்.

தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டிகள்

தமிழர் பேரவை, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய வற்றின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப, மகிழ்விப்பு, வடிவமைப்புப் போட்டி கள் (TED) முதன்முறையாக தமிழில் நடத்தப்படவுள்ளன. பள்ளிகளைப் பிரதிநிதித்து மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிக்கு பதிவுசெய்ய இறுதி நாள் இம்மாதம் 22ஆம் தேதி. பள்ளிகள் வழியாகப் பதிவுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற் பதற்கு மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்கில் அறிமுகப் பயிலரங்கு இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்படும்.

Pages