You are here

தலைப்புச் செய்தி

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்து முறை உலகளவில் தலைசிறந்தது

சிங்கப்பூரின் குடிமக்கள் பொதுப் போக்குவரத்து முறையில் அதிகபட்ச மனநிறைவைத் தெரிவித்து உள்ளனர். மெக்கின்ஸி என்னும் ஆலோசனை சேவை நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

வீட்டு உரிமையாளர்களின் வெவ்வேறான கருத்துகள்

பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் புதிய திட்டங் களை அறிவித்தார். அதில் ஒன்று ‘வெர்ஸ்’ எனப்படும் விருப்பத் திற்கேற்ப முன்கூட்டிய மறுமேம் பாட்டுத் திட்டம். தேர்ந்தெடுக்கப் பட்ட குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள் தங்களது 70 ஆண்டு பழமையான வீட்டை அர சாங்கத்திடமே திரும்ப விற்பதற்கு வாக்களிக்கலாம். பழைய பேட்டைகளைப் படிப்படி யாகப் பொலிவூட்டும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி அது. இத் திட்டம் தொடர்பான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

தேசிய தினப் பேரணி உரை 2018: இல்ல மேம்பாட்டுத் திட்டம் விரிவாக்கம்

இல்ல மேம்பாட்டுத் திட்டம் மேலும் 230,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட இல்ல மேம் பாட்டுத் திட்டம், 1987 முதல் 1997ஆம் ஆண்டு வரை கட்டப் பட்ட வீவக வீடுகளுக்கு விரிவு படுத்தப்படும்.

கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி

நூறாண்டுகளில் இல்லாத மழை வெள்ள பாதிப்பால் அவதிப்பட்டு வரும் கேரள மாநி லத்திற்கு இடைக்காலமாக 500 கோடி ரூபாய் (S$98.2 மில்லியன்) நிவாரண நிதி வழங்கப் படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவைப் புரட்டியெடுத்து வரும் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 300க் கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றன; லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

சண்முகம்: பல துறை ஒத்துழைப்பு அவசியம்

இயற்கைச் சீற்றங்களின் மிரட் டலுக்கு இடையில் பேரிடர் நிர் வாகக் கொள்கைகளை ஆசியான் வலுப்படுத்த வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று கூறினார். பேரிடரைத் தொடர்ந்து அதிலி ருந்து மீளும்போது வெவ்வேறு துறைகளை இணைத்துக்கொள் வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பேரிடர் நிர்வாகத் துக்கான நான்காவது ஆசியான் உத்திபூர்வ கொள்கை உரை யாடலின்போது திரு சண்முகம் தெரிவித்தார்.

உணவு விரயத்துக்கு எதிரான இயக்கம்: 65 தொடக்கப்பள்ளிகள் இவ்வாண்டு பங்கேற்பு

உணவை விரயமாக்குவதற்கு எதிரான ‘கிளீன் பிளேட்’ (Clean Plate) இயக்கத்தில் இவ்வாண்டு தொடக்கப்பள்ளிகளும் உணவங் காடி நிலையங்களும் பங்கேற் கின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 65 தொடக்கப்பள்ளிகள் இந்த இயக் கத்தில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பள்ளியையும் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு இயக்கத்தின்வழி உணவு விரயத் தினால் ஏற்படும் சுற்றுப்புற, சமுதாய தாக்கம் பற்றிய விழிப் புணர்வு ஏற்படும். அத்துடன் முதன்முறையாக இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து உணவங்காடி நிலையங்களுக்கும் இந்த இயக்கம் விரிவுபடுத்தப் படவிருக்கிறது.

லிட்டில் இந்தியாவுக்கு பொலிவூட்டும் புதிய ‘தேக்கா பிளேஸ்’ கட்டடம்

முந்தைய ‘தி வெர்ஜ்’ கடைத் தொகுதி இருந்த இடத்தில் ‘தேக்கா பிளேஸ்’ என்ற பத்து மாடி பிரதானக் கட்டடமும் அதன் அருகில் கூரைத் தளம் கொண்ட ஏழு மாடி இணைப்புக் கட்டடமும் கட்டப்படவிருக்கின்றன. சிராங்கூன் சாலையில் அமைய விருக்கும் இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் பற்றிய தக வல்கள் நேற்று முன்தினம் அறி விக்கப்பட்டன. இப்புது கட்டடத்தில் கலை, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக் கியத்துவம் அளிக்கப்படுவதுடன் கண்காட்சிகள், கலைப்படைப்புகள், நிகழ்ச்சிகள் என்பவைக்கும் இடங் கள் ஒதுக்கப்படும்.

12 புதிய ரயில்கள் அறிமுகம்

அடுத்த மாதம் புதிதாக ஆறு ரயில்கள் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று எஸ்எம் ஆர்டி நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி நியோ கியன் ஹோங் தெரிவித்து உள்ளார். புதிய பொறுப்பை ஏற்ற அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசி னார். சிங்கப்பூரில் அதிகமா னோர் பயன்படுத்தும் நீண்ட ரயில் தடங்களான வடக்கு= தெற்கு, கிழக்கு=மேற்கு ஆகிய வற்றில் 12 புதிய ரயில்கள் சேர்க்கப்பட இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், எஞ்சிய ஆறு ரயில்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சேவையில் விட திட்டமிட்டிருப்பதாகச் சொன் னார். தற்போது இவ்விரு தடங் களிலும் 186 ரயில்கள் சேவை யில் உள்ளன.

குடும்பங்களுக்குச் சாதகமான வேலை ஏற்பாடுகள்

குடும்பங்களுக்குச் சாதகமான வேலையிட ஏற்பாடுகளை மேலும் அதிக நிறுவனங்கள் இம்மாதம் 31ஆம் தேதியில் வழங்க உள்ளன. சிங்கப்பூரர்கள் தங்கள் குடும்பங் கள் மீது அதிக கவனத்தைச் செலுத்த ஊக்குவிக்கும் திட்டங் களில் இதுவும் இடம்பெறுகிறது.

கேரளாவில் 50 ஆண்டு காணாத மழை

இந்தியாவின் கேரள மாநிலத் தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியது. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழை யால் கேரளாவில் உள்ள எல்லா அணைகளும் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.

Pages