You are here

தலைப்புச் செய்தி

‘சாஸ்’ திட்டத்திலிருந்து பத்து மருந்தகங்கள் இடைநீக்கம்

சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) பங்கேற்றிருந்த பத்து ஆக்செஸ் மருந்தகங்களை சுகாதார அமைச்சு அத்திட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த இடைநீக்கம் இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த மருந்தகங்கள் அனைத்தும் ஆக்செஸ் மருத்துவக் குழுமத்தின்கீழ் செயல்படுபவை. கடுமையான விதி மீறலுக்கு உள்ளான பல்வேறு சாஸ் கோரிக்கைகளை அந்த மருந்தகங்கள் முன்வைத்திருந்தன. அதாவது, நோயாளிகள் வருகை அல்லது நீண்டகால சிகிச்சை குறித்து அந்த மருந்தகங்கள் தாக்கல் செய்து இருந்த விண்ணப்பங்களுடன் போதிய ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை.

ரயில், பேருந்துகளிலும் தீபாவளி அலங்காரங்கள்

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வேளை யில், பேருந்துகள், ரயில்கள், ரயில் நிலையங்கள், பூன் லே ஒருங் கிணைந்த போக்குவரத்து நடுவம் போன்றவற்றிலும் செய்யப்பட்டுள்ள தீபாவளிக் கருப்பொருளை ஒட்டிய அலங்காரங்கள் கொண்டாட்ட உணர்வைக் கூட்டியுள்ளன. லிட்டில் இந்தியா கடைக் காரர்கள், மரபுடைமைச் சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன.

தொண்டூழியர்களின் உதவியுடன் 22,000 பேருக்கு அன்னதானம்

பல்லாயிரக்கணக்கான பக்தர் களுக்கு அன்னதானம் வழங்குவது இந்து கோயில்களின் சிறப்பாகும் என்றும் அது அவர்களின் கலா சாரத்தில் ஊறிய ஒன்றாக விளங்கு கிறது என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். சிராங்கூன் சாலையில் அமைந் திருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் நேற்று நடந்த புரட்டாசி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். செப்டம்பர் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் தமிழ் புரட்டாசி மாத விழா மகா விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

நீண்டகால நிதியுதவி நாடும் குடும்பங்கள் அதிகரிப்பு

அரசாங்கத்திடம் இருந்து நீண்ட காலத்திற்கு நிதியுதவியை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதுமை அல்லது நோய்வாய்ப்பட்டிருத்தல், குடும்பத்தினரின் ஆதரவுக் குறைவு போன்றவற்றால் வேலைக் குச் செல்ல முடியாத மூத்த குடி மக்களின் எண்ணிக்கை கூடி இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் நடத்தப்படும் அந்த நீண்டகால நிதியுதவித் திட்டத் தின்கீழ் 2017ஆம் நிதியாண்டில் 4,409 குடும்பங்கள் உதவி பெற் றன. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,387ஆகவும் 2013ஆம் ஆண்டில் 3,568ஆகவும் இருந்தது.

வேலைவாய்ப்புச் சட்டத்தில் முக்கிய மாறுதல்கள்

உயர் வருவாய் ஈட்டும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரையும் உள்ளடக்கும் வகையில் வேலைவாய்ப்புச் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. வேலைச் சந்தையில் இந்தப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், வேலைவாய்ப்புச் சட்டம் $4,500 வரை சம்பளம் பெறுவோரை மட் டுமே உள்ளடக்கும் என்ற பிரிவு நீக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பிரிவைச் சேர்ந்தோருக்கு குறைந் தபட்ச ஆண்டு விடுப்பு நாட்கள், சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மருத்துவமனை விடுப்பு, தவறாக வேலைநீக்கம் செய்யப் பட்டதற்கான இழப்பீடு போன்ற அனுகூலங்களை இவர்கள் பெற முடியும்.

வங்கியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட் டர்ட் வங்கியிலிருந்து கிட்டத்தட்ட அரை மில்லியன் வெள்ளியை அச்சுறுத்திப் பறிக்க முயன்றதாக இந்திய நாட்டவர் ஒருவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. நாகராஜன் பாலாஜி, 35, எனப்படும் அவருக்கு எதிரான இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரையி லான சிறைத் தண்டனையும் பிரம் படிகளும் தண்டனையாக விதிக் கப்படலாம். தமக்கு $500,000 வெள்ளி தரப்படாவிட்டால் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மின்னிலக்க வங்கியின் உலகத் தலைவர் ஆலிஷான் ஜைடி, 47, பற்றி அவதூறு கருத்துகளை வெளியிடப்போவதாக பாலாஜி மிரட்டியதாக நீதிமன்ற ஆவணங் கள் தெரிவித்தன.

கப்பலில் வந்து இறங்கிய புதிய ரயில் பெட்டிகள்

அடுத்த ஆண்டில் தொடங்கப் படும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி சேவை திட்டத்தின் பணிகள் நிர்ணயித்தபடி நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தச் சேவை யில் பயன்படுத்தப்படும் இரண்டு ரயில் பெட்டிகள் நேற்று கப்பலில் ஜூரோங் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. புதிய ரயில் பெட்டிகள் இறக்கப் பட்டு பணிமனைக்குக் கொண்டு செல்லப்படுவதை அங்கு வந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேரில் பார்வையிட்டார். புதிய ரயில் பெட்டிகள் சோதனையிடப்பட்டு பின்னர் மண் டாய் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

புதிய நியமன உறுப்பினர்கள் பதவியேற்றனர்

நாடாளுமன்றத்துக்கு நியமன உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றி ருக்கும் ஒன்பது பேர் நேற்று நாடா ளுமன்றத்தில் தங்கள் பதவிப் பிர மாணத்தை எடுத்துக்கொண்டனர்.

நான்காம் தலைமுறை அமைச்சர்களின் வாராந்தர தொகுதிச் சுற்றுலா

நான்காம் தலைமுறைத் தலைவர் கள் வாரந்தோறும் தொகுதி வருகை மேற்கொண்டு வருகின் றனர். அந்த வகையில் நேற்றுக் காலை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கல்வி அமைச்சர் ஓங் யி காங், தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோர் செங்காங் சவுத் தொகுதியில் உள்ள ஹவ்காங் வில்லேஜ் எனும் இடத்துக்குச் சென்று அங்குள்ள குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினர். அத்தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினர் திரு கான் தியாம் போ அவர்களுடன் சென் றிருந்தார்.

Pages