You are here

உல‌க‌ம்

பார்வை இழந்தவருக்கு வழிகாட்டும் குட்டி குதிரை

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இந்தியர் முகம்மது சலீம் பட்டேல் தம் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்து வர, அவரின் தினசரி பணிகளில் வழிகாட் டுவதற்காக குட்டி குதிரை ஒன்று உதவிக்கரம் நீட்ட இருக்கிறது. இதுவே இங்கிலாந்து நாட்டில் நிகழவிருக்கும் முதல் சம்பவம். பிபிசி நிருபராகப் பணிபுரியும் 24 வயது திரு பட்டேல், கண் நோயால் பாதிக்கப்பட்டு தம் இடது கண்ணில் முற்றிலுமாக பார்வையை இழந்துவிட்டார். இப்போது வலது கண்ணில் சிறிதளவே பார்வை உள்ளதாகவும் அதுவும் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. நாய்கள் என்றால் இவருக்குச் சிறுவயதிலிருந்தே பயம் என் பதால் பார்வை இழந்தோருக்கான வழிகாட்டி நாய்களைப் பயன் படுத்த அஞ்சினார்.

நிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண

ஈப்போ: கேமரன் ஹைலண்ட்ஸில் உள்ள வீடு ஒன்றில் இருந்த மியன்மார் நாட்டவர் மூவர் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் புதையுண்டு உயிர் இழந்துள்ளனர். கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டபோது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவர்களின் குடிசை வீடு இடிந்து அதில் அவர்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு தம் பதியும் அவர்களின் நண்பரும் அடங்குவர். மூவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை மூன்று மணிக்குச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. போலிசாருக்கு காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

‘வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் தீர்வு காணவேண்டும்’

பாலி: உலகப் பொருளியலை ஆட்டம் காண வைக்கும் வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் ஒன் றிணைந்து ஆக்ககரமான ஒரு தீர்வைக் காணவேண்டும் என்று சீனாவின் மத்திய வங்கி ஆளுநர் யீ காங் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் நிலவி வரும் இறுக்கமான உறவை மேம்படுத்து வதில் சீனா தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் நேற்று நடைபெற்ற அனைத்துலக வங்கிப் பரிவர்த்தனைக் கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.

இந்தோனீசியாவுக்கு உலக வங்கியின் $1 பி. நிதி

பாலி: நிலநடுக்கத்தால் நிலை குலைந்து உள்ள இந்தோனீசியா வுக்கு இனி வரக்கூடிய பேரிடருக் குத் தயார் நிலையில் இருக்கவும் இதுவரை நிகழ்ந்ததிலிருந்து மீண்டு வரவும் உலக வங்கி நிறுவனம் $1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.37 பில்லியன்) நிதியை வழங்கவிருக்கிறது. இந்நிதி இந்தோனீசியாவின் மீளும்தன்மையை வலுப்படுத் துவதுடன் லொம்போக், மத்திய சுலாவேசி ஆகிய இடங்களில் நிவாரண, மறுசீரமைப்புப் பணி களுக்காகவும் பயன்படுத்தப்படும் என நேற்று வெளியிட்ட அறிக்கை வழி நிறுவனம் தெரிவித்தது. பேரிடர்கள் ஒன்றன்பின் ஒன் றாக வந்து உலுக்கி, பலரும் உயிர் இழந்து, இருப்பிடத்தை இழந்து உள்ள நிலையில் இது பேருதவியாக அமையும்.

இந்தோனீசியா: வெள்ளம், நிலச்சரிவில் 22 பேர் பலி

மன்டேலிங்: மேற்கு இந்தோனீ சியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத் தில் குறைந்தது 22 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்ததால் வடக்கு சுமத்திராவிலுள்ள மன்டேலிங் மாவட்டத்தில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற் பட்டன. இஸ்லாமிய பள்ளி ஒன்று நிலச் சரிவில் புதையுண்டதை அடுத்து, 22 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேரைக் காணவில்லை என் றனர் அதிகாரிகள். நிலச்சரிவு களால் மீட்புப் பணி முயற்சிகள் பாதிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

நாணய மதிப்பு குறித்து ஐஎம்எஃப் இணக்கம்

பாலி: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொருளியல் தலைவர்கள், போட்டிபோடும் நோக்கத்துடன் தங்களது நாணய மதிப்பைக் குறைப்பதை இனிமேல் தவிர்க்கப்போவதாக நேற்று உறுதி எடுத்துக்கொண்டனர். சரியான நிதிக்கொள்கைகள், வலுவான பொருளியல் அடித்தளம், மீள்திறன் கொண்ட அனைத்துலக நிதி அமைப்பு ஆகியவை நிலையான பணமாற்ற விகிதங்களுக்குப் பங்களிப்பதாக அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

நேப்பாளத்தில் பனிப்புயலால் தென்கொரிய மலையேறிகள் ஒன்பது பேர் மரணம்

காட்மாண்டு: நேப்பாளத்திலுள்ள குர்ஜா மலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கியிருந்த தென் கொரிய மலையேறிகள் அனை வரும் உயிர் இழந்ததாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று எனத் தகவல்கள் கூறுகின்றன. நான்கு தென்கொரிய மலை யேறிகள், நேப்பாளத்தைச் சேர்ந்த நான்கு வழிகாட்டிகள் ஆகி யோரின் இறந்த உடல்களை மீட்புக் குழு ஒன்று நேற்று காலை கண்டுபிடித்தது. மீட்புப் பணி களுக்கு பலத்த காற்றும் கடுமை யான குளிரும் இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது தென்கொரிய மலையேறி ஒருவரும் இறந்ததாக நம்புவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தோனீசியாவில் பயிற்சி நிலையத்தை நிறுவ ஜாக் மா விருப்பம்

பாலி: பிரபல இணைய வர்த்தகத் தளமான அலிபாபாவின் இணை நிறுவனர் ஜாக் மா, இந்தோனீசியாவில் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அலிபாபாவின் தலைவர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ள அவர், இணைய வர்த்தகம் தொடர்பான பயிற்சிகளை இந்த நிலையம் இந்தோனீசியர்களுக்கு வழங்கும் என அனைத்துலக பண நிதிய கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆயினும், இந்நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதைப் பற்றி அவர் கூறவில்லை. அலிபாபா நிறுவனத்தின் ஆகப் பெரிய சந்தைகளில் இந்தோனீசியாவும் ஒன்று.

முதலையால் தாக்கப்பட்ட பெண் பலி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், அந்நாட்டின் பழங்குடிப் பெண் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டதை அடுத்து மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பெண் ஆற்றுத் தண்ணீருக்குள் நின்றுகொண்டே மீன் பிடிக்க முயன்றபோது முதலை ஒன்று திடீரென அவரைக் கவ்வி இழுத்துக்கொண்டு மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த இவரது குடும்ப உறுப்பினர்கள், இவரைக் கண்டுபிடிக்க முயன்றபோது அவர்களது முயற்சி பலனிக்கவில்லை. பின்னர், அவரது உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஜெர்மனியில் அதிவேக ரயிலில் தீ; பயணிகள் தப்பினர்

ஜெர்மனியில் அதிவேக ரயில் தீப்பிடித்து எரிந்தது. ஃபிராங்க்ஃபர்ட்-கோலோன் இடையே ரயில் தீப் பிடித்து எரிந்ததாகவும் இதில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை டியர்டோர்பை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் தீ மூண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 510 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. படம்: இபிஏ

Pages