You are here

உல‌க‌ம்

ஈரான், சிரியா இடையே புதிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

டமாஸ்கஸ்: சிரியாவின் உள் நாட்டுப் போரில் அதிபருக்கு ஆத ரவாக ஈரான் நாட்டு ராணுவப் படைகள் போரிட்டு வருகின்றன. ஆனால், சிரியாவில் இருக்கும் ஈரானிய படைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற அமெரிக்கா விடம் படைகளைத் திரும்பப் பெரும் எந்த நோக்கமும் இல்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானின் பாது காப்பு அமைச்சர் அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஜெர்மனியில் 2வது உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் லுட்விக்‌‌‌ஷாஃபென் என்ற கட்டுமானத் தளத்தில் 2வது உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அகற்றுவதற் காக சுற்று வட்டாரத்தில் வசித்த 18,500 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது. படம்: ஏஎஃப்பி

ஆஸ்திரேலிய அரசுக்கு மீண்டும் நெருக்கடி; அமைச்சர் பதவி விலகல்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் அமைச்சரவை பொறுப்பு ஏற்று இரண்டே நாட்களில் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் நேற்று பதவி விலகினார். முன்னைய பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமைக்கு கட்சிக்குள் ளாகவே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக அதிக வாக்கு களைப் பெற்று ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்காட் மோரிசன் பிரதமரானார். ஆனால் அவரது அமைச்சரவை பொறுப்பு ஏற்ற இரண்டே நாட்களில் ஜூலி பிஷப் பதவி விலகியிருப்பது ஆஸ்தி ரேலிய அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

தாய்லாந்து குகை மீட்பு கண்காட்சி திறப்பு

பேங்காக்: தாய்லாந்து குகையி லிருந்து 13 பேர் மீட்கப்பட்ட சம் பவம் உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு கணமும் திகில் படம் போன்று இருந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேங்காக்கில் உள்ள பிரபல ‘சியாம் பாரகன்’ கடைத் தொகுதியில் கண்காட்சி திறக்கப் பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை இந்த கண்காட்சி தரும் என்று இதனை ஏற்பாடு செய்துள்ள கலா சார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம் லுவாங் குகையில் சிக்கிக் கொண்டனர்.

ஆப்கானில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபு சாத் எர்ஹாபி நேற்று மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் சுட்டுக் கொல் லப்பட்டான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் பயங்கர வாதக் குழுவைச் சேர்ந்த மேலும் பத்து பேர் கொல்லப்பட்டனர். நங்கார்ஹார் மாவட்டத்தில் உள்ள மறைவிடத்தில் பதுங்கி யிருந்த அவர்கள் மீது நேற்று ஆப்கான் படைகளும் வெளி நாட்டுப் படைகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான ஆயு தங்களும் வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரி கள் கூறினர். ஆனால் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாதக் குழுவின் ‘அமாக்’ செய்தி நிறுவனம் கருத்து எதுவும் வெளியிட வில்லை.

ரோஹிங்யா அகதிகள்: நீதி கிடைக்க வேண்டும்

டாக்கா: மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையைக் கையாண்ட போது பலர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினரின் அட்டூழியங் கள் மற்றும் ராக்கைன் மாநிலத் தில் நீடித்த சண்டைக்குப் பயந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள பங்ளாதே‌ஷில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். மியன்மார் ராணுவத்தின் ஒடுக்குமுறையால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பலர் இனப்படுகொலை செய்யப்பட் டனர். இது நடந்து ஓராண்டு ஆகிறது.

வெனிசுவேலாவிலிருந்து வெளியேறும் மக்கள்

கராக்கஸ்: வெனிசுவேலாவில் பொருளியல் நலிவடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் பெரு, கொலம்பியா, இக்வடோர் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வரும் நிலையில் அந்த நாடுகள் குடியேறிகள் வருவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எல்லையில் கடுமை யான விதிமுறைகளை பெரு அரசாங்கம் விதித்துள்ளது. அதே போல இக்வடோரும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெனிசுவேலாவிலிருந்து வெளி யேறும் குடியேறிகள் தவிக்க நேர்ந்துள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 1,000 பேர் கைது

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவர்களைக் கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை போலிசார் கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதில் 275 பேர் கொலைக் குற்றவாளி களாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில் சுமார் 6,000 போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த தாகக் கூறப்பட்டது.

அம்னோ ஆண்டுக் கூட்டம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே

பெட்டாலிங் ஜெயா: வழக்கமாக ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு இரண்டு நாள் மட்டுமே நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் அக்கூட்டம் நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் முற்பகுதியில் கோலா கலமாக நடக்கும். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அம்னோ ஆண்டுக் கூட்டத்தை ஆடம்பர மின்றி நடத்த அக்கட்சி தீர்மானித்திருப்பதாகக் கூறப் படுகிறது. அடுத்த மாதம் அம்னோ ஆண்டுக் கூட்டம் நடைபெற வுள்ளது. அம்னோ மகளிர், இளைஞர் அணி அவற்றின் கூட்டங்களைச் செப்டம்பர் 29ஆம் தேதியும் கட்சியின் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதியும் நடக்கும் என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாதீர்: ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டம் ரத்து செய்யப்படவில்லை

கோலாலம்பூர்: சீனாவின் ஆதரவிலான இசிஆர்எல் எனப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புத் திட்டத்தை தள்ளி வைப்பதா? அல்லது மாற்று வழிமுறைகளில் அதனைக் கையாள்வதா? என்பது குறித்து மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஒத்திவைப்பது அல்லது வேறொரு தரப்பிடம் இந்தத் திட்டத்தை வழங்குவது ஆகிய அம்சங்கள் குறித்து இப்போதைக்கு ஆராயப் படுகிறது. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

Pages