You are here

உல‌க‌ம்

மலேசிய உளவுத் துறை முன்னாள் அதிகாரிக்கு தடுப்புக் காவல்

கோலாலம்பூர்: பொதுத்தேர்தலுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார உளவுத்துறை அமைப்பின் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக அவரை 5 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஹில்லரியின் மின்னஞ்சல் தகவல் திருட்டு: சீனாவை சாடும் டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் திரு டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டனின் மின்னஞ்சல் தகவல்கள் களவு போனதற்கு சீனாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் திரு டிரம்ப் சீனா மீது குறை கூறியுள்ளார்.

ஏமன் நாட்டில் போர் குற்றங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

சானா: ஏமன் நாட்டில் சண்டை நீடிக்கும் வேளையில் அங்கு போர் குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்று ஐநா மனித உரிமை குழுக்களின் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஏமனின் அரசாங்கப் படைகளுக்கும் ஹுதி போராளி களுக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட் டணிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது கூட்டணிப் படை தாக்குதல் நடத்தியதில் மக்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஏமன் நிலவரம் குறித்த அறிக்கையை நிபுணர்கள் அடுத்த வாரம் ஐநா மனித உரிமைகள் மன்றத்திடம் தாக்கல் செய்ய வுள்ளனர்.

பொதுத் தேர்தல் நிதி முறைகேடு: மலேசிய அதிகாரிகள் எழுவர் கைது

மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக் கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி யதாகக் கூறி உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் உட்பட அரசாங்க அதிகாரிகள் எழுவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரதமர் துறை யின் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டோரில் அப்பிரிவின் உதவித் தலைமை இயக்குநரும் அடங்கு வார். மற்ற அறுவரும் நிர்வாக, அரச தந்திர சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள். அந்த உதவித் தலைமை இயக்குநர் மலேசிய லஞ்ச, ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

டிரம்ப்: மெக்சிகோவுடன் முக்கிய வர்த்தக உடன்பாடு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவும் மெக்சிகோவும் முக்கிய வர்த்தக விதிமுறைகள் குறித்து பொதுவான உடன்பாடு கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க நெருக்குதல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அந்த உடன்பாடு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதியாக இந்த உடன்பாடு கனடாவின் சம்மதத்துடன் முழுமை பெறும் என்று கூறப்படுகிறது. கனடா இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக இடம் பெறுகிறது.

மகாதீரிடம் வி ளக்கம் கேட்க விரும்புகிறது ஜோகூர்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் பல பில்லியன் டாலர் செலவில் கட்டப்படவுள்ள ஃபாரஸ்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்ட வீடுகள் வெளிநாட்டினருக்கு விற்கப்படாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருப்பது ஜோகூர் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநிலத் தின் நிர்வாக மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்த புதிய கட்டுப்பாடு குறித்து ஜோகூர் அரசாங்கத்திற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று ஜோகூர் வீடமைப்பு, கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் தலைவர் சுல்கிஃபிலி அகமட் கூறியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனீசியாவை உலுக்கிய 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனீயாவின் கிழக்குப் பகுதியை நேற்று 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் கூறினர். டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நேற்று உலுக்கிய நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக கருதப்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்கள் பற்றிய உடனடி தகவலும் வெளியாகவில்லை. பல தீவுகளைக் கொண்ட இந் தோனீசியாவில் ஆண்டுதோறும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

அடிப்படை சுகாதாரமற்ற பள்ளிகள்; நோய்களை எதிர்நோக்கும் பிள்ளைகள்

லண்டன்: உலகின் பாதி பள்ளிக் கூடங்கள் சுகாதாரமற்று உள்ள தாகவும் இதனால் பிள்ளைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ள தாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கிட்டத்தட்ட பாதி பள்ளிக் கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனி செப் ஆய்வு. “இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல் லும் சுமார் 900 மில்லியன் பிள் ளைகளின் உடல்நலம் கேள் விக்குறியாகி உள்ளது. “அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது,” என்கிறார் இந்த ஆய்வை வழி நடத்திய உலக சுகாதார அமைப் பின் ரிக் ஜான்ஸ்டன்.

ஃபுளோரிடாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

ஃபுளோரிடா: ஃபுளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத் தியவர் உட்பட மூவர் உயிர் இழந்தனர். ஃபுளோரிடாவில் உள்ள ‘ஜாக் சன்வில் லேண்டிங்’ எனும் வணிக வளாகத்தில் காணொளி விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐநா: மியன்மார் ராணுவம் செய்தது இனப்படுகொலை

ஜெனிவா: ரோஹிங்யா அகதிக ளுக்கு எதிராக மியன்மார் ராணு வம் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாக ஐநா கூறியுள்ளது. இதற்காக ராணுவத் தளபதி கள் ஆறு பேர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது. அப்போதைய ஆங் சான் சூச்சியின் தலைமையிலான அரசு கும்பல் கொலை, கூட்டு பலாத் காரம் போன்ற போர் குற்றங்களில் இருந்து சிறுபான்மையினரைக் காக்க தவறிவிட்டதாகவும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pages