உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசியாவில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
டெல் அவிவ்: காஸா பகுதியில் நிரந்தரமாக இருக்கும் எண்ணம் இஸ்ரேலுக்குக் கிடையாது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யோஆவ் கலான்ட் தெரிவித்துள்ளார்.
தோக்கியோ: ஜப்பானில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகக் கல்வியை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் ஐந்து நாள்களுக்குள் தங்களுடைய கடப்பிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்று டிசம்பர் 11ஆம் தேதி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துபாய்: வறட்சியை எதிர்கொள்ளும் ஆற்றலுடைய பயிர்களை உருவாக்குவது, குறைந்த அளவிலான மீத்தேன் வாயுவை வெளியேற்றும் மாடுகளை வளர்ப்பது ஆகியவை பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில.