You are here

உல‌க‌ம்

அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் பதவி நீக்கம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த தற்காலிக அரசாங்க தலைமை வழக்கறிஞர் சேலி யேட்ஸ் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். திரு ஒபாமா அதிபராக இருந்த போது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட திருவாட்டி சேலி யேட்ஸ் முன்னதாக திரு டிரம்பின் ஆணையை அமலாக்க வேண் டாம் என்று அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றும் வழக் கறிஞர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அவரை திரு டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு துரோகம் செய்து விட்டார் என வெள்ளை மாளிகை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பயணத் தடைக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேறிகளுக்கு விதித் துள்ள பயணத் தடைக்கு அமெரிக் காவிலும் மற்ற நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. திரு டிரம்ப்பின் பயணத் தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்கா வின் பல இடங்களில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. அந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபரின் உத் தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இருப்பினும் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு விதிக்கப் பட்டுள்ள பயணத் தடை குறித்து டிரம்ப் நிர்வாகம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்ற பிரான்ஸ் அழகி

மணிலா: பிலிப்பீன்சில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயது மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் பிரபஞ்ச அழகி யாக பட்டம் சூட்டப்பட்டார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 12 பேரைத் தோற்கடித்து ஐரிஸ் மிட்டனேர் வெற்றி பெற்றார். பாரிஸ் நகரைச் சேர்ந்த ஐரிஸ் பல் மருத்துவ மாணவி ஆவார். “போட்டியில் நான் வெற்றி பெற்றது வியப்பாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது,” என்று ஐரிஸ் மிட்டனேர் கூறினார். “பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.

சிவசேனா: ராமர் கோயில் கட்டாதது ஏன்

மும்பை: தேர்தல் நெருங்கும்போது மட்டும் ராமர் கோயில் விவ காரத்தை கையில் எடுக்கும் பார திய ஜனதா, இதுவரை அயோத் தியில் ராமர் கோயில் கட்டாதது ஏன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியிருக்கிறார். மத்திய அரசாங்கத்திலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. இருந்தாலும் பாஜகவுடன் அது மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் பாரதிய ஜனதா தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கை நிறுத்திவைப்பு

மணிலா: போதைப்பொருள் சந்தேக நபர்கள் மீது பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் எடுத்துவந்த கடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்துள்ளனர். முதலில் போலிஸ் படையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அப்புறப்படுத்த வேண்டியிருப் பதாகவும் அதன் பின்னர் போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையை தொடங்க இருப் பதாகவும் போலிஸ் படைத் தலைவர் ரோனல்ட் டிலா ரோசா கூறினார். போலிஸ் தலைமை யகத்தில் தென்கொரிய வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலிசாரின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

10,000 அகதிகளைப் பணியில் அமர்த்த ஸ்டார்பக்ஸ் திட்டம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள பயணத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகெங்கிலுமிருந்து 10,000 அகதிகளை வேலையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்டார்பக்ஸ் தலைவர் ஹோவர்ட் ஸ்ஹுல்ட் அந்நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான ஸ்ஹுல்ட், புதிய அதிபர் டிரம்ப்பின் உத்தரவு ஊழியர்களுடனான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தொடர்பை பாதிப்பதாகக் கூறினார்.

 

டிரம்ப் குடிநுழைவு உத்தரவுக்கு குறுக்கே அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் குடிநுழைவுக் கொள்கைகளை மாற்றுகிறார். அதன்படி அமெரிக்காவுக்குள் அடுத்த 120 நாட்களுக்கு அகதி கள் யாருக்கும் அனுமதி கிடை யாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கு விசா கிடையாது என்று கூறும் அமலாக்க உத்தரவுகளில் அதிபர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

பெண் பக்தர்களை எச்சரித்த தைப்பூச ‘சாயத்தெளிப்புக் கும்பல்’ பேர்வழி கைது

நடக்கும் தைப்பூசக் கொண்டாட்டத் தின்போது அந்த இந்து சமயப் பெருவிழாவிற்கு ஏற்ற வகையில் பெண்கள் உடை அணிந்து வர வேண்டும் என்றும் அப்படி வராமல் கண்டபடி உடை அணிந்து வரு வோர் மீது சாயம் தெளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்த ஒரு குழுவை உருவாக்கிய ஆசாமியை சிலாங்கூர் போலிஸ் கைது செய்து இருக்கிறது. ‘தைப்பூச சாயம் தெளிப்புக் கும்பல்’ என்று குறிப்பிடப்படும் ஓர் அமைப்பை உருவாக்கியவர் என்று கூறப்படுகின்ற 29 வயது ஆடவர் வியாழக்கிழமை இரவு சுமார் 9.20 மணிக்கு செபராங் ஜயாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் சமாமாட் தெரிவித்து உள்ளார்.

மலேசியாவில் 31 பேருடன் காணாமல் போன படகு: 22 பேர் உயிருடன் மீட்பு

கோத்தா கினபாலு: மலேசியாவில் சீனப்புத்தாண்டின் முதல் நாளில் 31 பேருடன் காணாமல்போன படகின் ஓட்டுநரும் சிப்பந்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பிற்பகல் இரண்டு மணி அளவில் இருவரும் கண்டுபிடிக்கப் பட்டனர் என்று மலேசிய கடலோர அமலாக்கப் பிரிவின் அதிகாரி ரஹிம் ரம்லி குறிப்பிட்டார். புலாவ் தீகாவுக்கும் சமராங் பெட்ரோலிய மேடைக்கும் இடையே உள்ள நீரிணையில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். கடந்த சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு சாபாவின் கோத்தா கினபாலுவில் உள்ள தஞ்சோங் ஆரு படகு முனையத்திலிருந்து பிரபல சுற்று லாத் தலமான புலாவ் மங்கால் தீவை நோக்கிப் படகு பயணம் செய்தது.

பாகாங் வெள்ளத்தில் குழந்தை பலி

குவாந்தான்: பாகாங்கில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்துக்கு முதல் முறையாக ஒரு குழந்தை பலியாகியிருக்கிறது. சனிக்கிழமை இரவு கம்போங் மேடாங் ஹீலிரில் உள்ள வீட்டுக்கு அருகே குழந்தை வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். சிட்டி நூர்டார்விஸ்யா அப்துல் ரஹ்மான் என்பது குழந்தையின் பெயர். அதற்கு ஒரு வயது எட்டு மாதங்கள் ஆகின்றன என்று பெகான் காவல் துறைத்தலைவர் அம்ரன் சித்திக் தெரிவித்தார்.

Pages