You are here

உல‌க‌ம்

அலுவலகப் பெண்களின் உடை விவகாரத்தில் கண்டிப்பு கூடாது: பிரிட்டன் நாடாளுமன்றம்

லண்டன்: வேலையிடத்தில் கவர்ச் சிகரமான உடை அணிய வேண் டும் என்றுரைக்கும் விதிகளைத் தடை செய்யும் வண்ணம் அரசாங்கம் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப் பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாகு பாட்டை வளர்க்க உதவும் விதி கள் இவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் சமத்துவம், புகார் மனுக்கள் என்னும் இரண்டு நாடாளுமன்றக் குழுக்களிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த அலுவலக முகப்பு ஊழியர் நிக்கோலா தோர்ப் கடந்த மே மாதம் உயர் குதிகால் காலணி அணியாமல் வேலைக்கு வந்ததற்காக வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

உளவுத் துறை தலைவரானார் மைக் போம்பியோ

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத் துறைத் தலைவராக திரு மைக் போம்பியோ பதவி ஏற்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று அவர் சிஐஏ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். திரு டிரம்ப்பின் அமைச்சரவையில் மூன்றாவதாக பதவி ஏற்றுக்கொண்டிருப்பவர் திரு போம்பியோ ஆவார். புதிய அமைச்சரவையில் இதுவரை மூன்று பேர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சராக ஜேம்ஸ் மெத்திஸ் பதவி ஏற்றார். உள்துறை அமைச்சராக ஜான் கெல்லி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை மீட்டெடுக்க ஆசிய நாடுகள் உறுதி

‘டிபிபி’ என்று சுருக்கமாக அழைக் கப்படும் பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன் பாட்டிலிருந்து அமெரிக்கா வில கியதால் ஆசிய நாடுகள் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந் தும் உடன்பாட்டைக் காப்பாற்றமுடியும் என்று நம்பிக்கை தெரி வித்துள்ளன. சீனாவையும் மற்ற ஆசிய நாடு களையும் சேர்ப்பதன் மூலம் ‘டிபிபி’ உடன்பாட்டுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று இரு நாடுகளின் தலைவர்கள் கூறினர். அமெரிக்காவின் முன்னைய அதிபர் ஒபாமா ‘டிபிபி’ உடன் பாட்டுக்கு முக்கியத் தூணாக விளங்கினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள் ளது.

அமெரிக்கா செல்லும் பயணிகளைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐஎஸ் குழு

பிரசல்ஸ்: சென்ற ஆண்டு பிரசல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் குழு அமெரிக்கா செல்லும் பயணிகளையும் யூதர்களையும் தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அமெரிக்க விமானம் ஒன்றை தாக்க ஐஎஸ் போராளிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என்று பெல்ஜியம் தலைமையிலான புலன்விசாரணைக் குழு கூறியது. இஸ்ரேல் செல்லவிருந்த யூதர்களைத் தாக்கவும் ஐஎஸ் போராளிகள் திட்டமிட்டிருந்ததாகவும் புலன்விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

துருக்கியிலிருந்து திரும்பிய 17 இந்தோனீசியர்கள் கைது

ஜகார்த்தா: துருக்கியிலிருந்து இந்தோனீசியாவுக்கு திரும்பிவந்த 17 பேரை இந்தோனீசிய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு உதவியதாக இந்தோனீசிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்தோனீசிய விமான நிலையத்தில் திங்கட்கிழமை வந்திறங்கிய அந்த 17 பேரையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இந்தோனீசியப் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வறண்ட வானிலையால் இந்த ஆண்டு புகைமூட்ட அபாயம்: இந்தோ. அதிபர் எச்சரிக்கை

இவ்வாண்டு நாடு வறண்ட வானிலையை எதிர்நோக்குவதால் நில, காட்டுத் தீ தடுப்பு நட வடிக்கைகளில் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று இந்தோனீசிய அதிகாரிகளை அதிபர் ஜோக்கோ விடோடோ வலியுறுத்தி இருக்கிறார். “2015ல் நிகழ்ந்த தீச்சம்பவங் களால் ஏற்பட்ட குழப்பமான சூழ் நிலையை, அவசர கதியில் செயல்பட்டதை நாம் நினைவில் வைத்துள்ளோம்.

சந்தேகப் பேர்வழிகள் நால்வர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: பிலீப்பீன்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ் குழுவில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்திருப்பதாக மலேசிய போலிசார் கூறினர். அவர்களில் 31 வயது பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவர், பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், 27 வயது மலேசிய மாது ஒருவர் ஆவர். அந்த நால்வரும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் சாபாவிலும் கோலாலம்பூரிலும் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். மத்திய கிழக்கிலிருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கிச்செல்லும் இடமாக சாபாவை மாற்ற திட்டமிட்டிருந்த புதிய ஐஎஸ் குழுவில் அந்த நால்வர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

ஜோகூர் அருகே படகு விபத்து: 10 பேர் மரணம்

ஜோகூர்பாரு: ஜோகூருக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் கூறினர். இந்தோனீசியாவிலிருந்து 40 பேரை ஏற்றிச்சென்ற படகு ஜோகூர் கடல் பகுதியில் மூழ்கியதாக மலேசிய கடல் துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்வதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்றபோது அதைக் காண இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் வா‌ஷிங்டனில் திரண்டிருந்ததாக வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாறான செய்திகளை வெளியிட்ட ஊடகங் களை திரு டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஊடகங்களும் செய்தி நிறு வனங்களும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளி யிடுவதாக திரு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

தாய்லாந்து, மலேசியாவில் வெள்ளப்பெருக்கு

பேங்காக்: தென்தாய்லாந்து மாநிலங்கள் கனமழையாலும் மோசமான வெள்ளப்பெருக்கி னாலும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் வரும் நாட்களிலும் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று தேசிய பேரிடர் மையம் எச்சரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல பகுதி களில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் சாலையைக் கடக்க சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

Pages