You are here

உல‌க‌ம்

போதைப்பொருள் வைத்திருந்த சிங்கப்பூரர் இந்தோனீசியாவில் கைது

ஜகார்த்தா: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தோனீசிய விமான நிலைய அதிகாரிகள் சிங்கப்பூரர் ஒரு வரைக் கைது செய்துள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண் டாவது சிங்கப்பூரர் ஆவார். பாலி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கோ தியாம் ஆன் டெஸ்மண்ட் என்று அடையாளம் காணப் பட்டுள்ள அந்த ஆடவரிடம் 1.47 கிராம் மெதம்ஃபெடமினும் இரண்டு எக்ஸ்டசி மாத்திரை களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சிறாருக்கு எதிரான பாலியல்: மலேசியாவில் புதிய சட்டம்

கோலாலம்பூர்: சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர் கொள்ள மலேசியா புதிய சட்டம் ஒன்றை அமலாக்கத் தயாராக இருக்கிறது. சிறாருக்கு எதிரான பாலியல் மசோதாவை மலேசிய நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய அதை அறிமுகம் செய்த பணிக்குழு திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் அசாலினா ஒத்மான் கூறினார். பிரிட்டனைச் சேர்ந்த ஆடவர் ஒருவரால் நூற்றுக்கணக்கான மலேசிய சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்க லாம் என்ற செய்தி வெளியானதும் இந்தப் பணிக்குழுவை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகரோலினா தேவாலயத்திற்கு ஹில்லரி வருகை

 படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந் துள்ள வேளையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன் ஞாயிற்றுக் கிழமை வடகரோலினாவில் உள்ள ஆப்ரிக்க அமெரிக்கர்களின் தேவாலயத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த பிரார்த்தனையில் கலந்துகொண்ட திருவாட்டி ஹில்லரி, துப்பாக்கி வன்முறைச் சம்வங்களில் பலியான கெய்த் லேமண்ட் ஸ்கூட் உள்ளிட்ட கறுப் பினத்தவர்களின் குடும்பத் தினருக்காக பிரார்த்தனை செய் தார்.

ஜப்பானில் சூறாவளி; விமானச் சேவைகள் ரத்து

தோக்கியோ: ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசுவதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சூறாவளி காரணமாக ஜப்பானின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஆல் நிப்பன் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை அவற்றின் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று நேற்று காலை ஒகினாவா தீவின் தலைநகரைத் தாக்கத் தொடங்கியதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரி வித்தது.

ஜப்பானிய விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2016 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபெல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த உயிரணு ஆராய்ச்சியாளர் யோ‌ஷிநோரி ஒசுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோஃபேகி என்றழைக்கப்படும் உயிரணுக்களின் அழிவு மற்றும் மறுசுழற்சி குறித்த ஆய்வுப் பணிக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரணுக்களின் அடிப்படை செயல்பாடுகளின் முக்கிய அம்சத்தை அவர் கண்டுபிடித்தார். யோ‌ஷிநோரி தொடர்ந்து விடாமுயற்சியுடன் பல சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். 1992ஆம் ஆண்டு அவர் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஆப்கானில் குண்டூஸ் நகரைக் கைப்பற்ற தலிபான் தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் வடக்கே உள்ள குண்டூஸ் நகரைக் கைப்பற்ற தலிபான் போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் நாலா பக்கங்களிலிருந்தும் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. அத்தாக்குதலை எதிர்த்து அரசாங்கப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக மாநில ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு குண்டூஸ் நகரம் தலிபான் போராளிகள் வசம் வீழ்ந்தது. ஆனால், அரசாங்கப் படையினர் அதனை மீண்டும் கைப்பற்றினர். குண்டூஸ் பகுதியிலும், தெற்கில் உள்ள ஹெல்மண்ட் பகுதியிலும் போராளிகள் முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிகளுடனான அமைதி உடன்பாடு; கொலம்பிய மக்கள் நிராகரிப்பு

கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் போராளிகள் இயக்கத்திற்கும் இடையே கா-ணப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த அமைதி உடன்பாட்டை அந்நாட்டு மக்கள் மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிராகரித் துள்ளனர். அந்த உடன்பாடு குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கொலம்பிய மக்கள் பலரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 13 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களித்தனர். ஆனால், 63,000 வாக்குகள் வித்தியாசத் தில் உடன்பாட்டை நிராகரிக்கும் தரப்பு வென்றது.

நோபெல் பரிசுக்கு குடிமைத் தற்காப்புக் குழு நியமனம்

நோபெல் பரிசுக்கு குடிமைத் தற்காப்புக் குழு நியமனம்

அலெப்போ: ‘ஒயிட் ஹெல்­மெட்ஸ்’ என்றழைக்­கப்­படும் சிரி­யா­வின் குடிமைத் தற்­காப்­புக் குழு இந்த ஆண்டின் அமை­திக்­கான நோபெல் பரி­சுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வெள்ளை நிற தலைக்­க­வ­சம் அணிந்து உதவிப் பணி­களில் ஈடு­படும் ஆயி­ரக்­க­ணக்­கான தொண்­டூ­ழி­யர்­களைக் கொண்டது இந்தக் குழு (படம்). சிரி­யா­வில் நடந்து வரும் போர் நட­வ­டிக்கை­க­ளில் சிக்கித் தவிக்­கும் பொது­மக்­களுக்கு இவர்­கள் உதவி வரு­கின்ற­னர். இடி­பாடு­களில் இருந்து காய­மு­ற்­றோரை மீட்டு மருத்­துவ சிகிச்சை அளிப்­பது, சட­லங்களை மீட்பது போன்ற பணி­களி­லும் அவர்­கள் ஈடு­படு­கின்ற­னர்.

கூடுதல் இழப்பீடு கோரி வியட்னாமியர்கள் போராட்டம்

ஹனோய்: விஷம்கொண்ட கழி­வு­கள் கடலில் கலந்து அதிக அளவில் மீன்கள் இறந்­து­போ­வ­தால் தைவானில் இருக்­கும் ஃபார்­மோசா ஸ்டீல் உற்­பத்தி நிறு­வ­னம் ஒன்றின் செயல்­பாட்டை நிறுத்­து­மாறு ஆயி­ரக்­க­ணக்­கான வியட்னா­மி­யர்­கள் நேற்று போராட்­டத்­தில் குதித்­த­னர். கய் ஆனில் இருக்­கும் அந்த நிறு­வ­னத்தைச் சூழ்ந்த போராட்­டக்­கா­ரர்­கள் மதில்­களின் மீது ஏறியும் பதாகை­களை ஏந்­தி­யும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். கத்­தோ­லிக்க சம­ய­குரு ஒரு­வ­ரின் தலைமை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்ட அவர்­கள் பைபிள் வாச­கங்களை­யும் உச்­ச­ரித்­ததைக் காட்டும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் வலம்­ வந்தன.

பெற்றோரைக் கொன்றதை மறைக்க அக்கம்பக்கத்தார் 17 பேர் கொலை

பெய்ஜிங்: தென்மேற்குச் சீனாவில் பணம் தொடர்பான தகறாரில் பெற்றோரைக் கொன்ற ஒருவர் அந்தக் குற்றத்தை மறைக்கும் நோக்கில் அக்கம்பக்கத்தார் 17 பேரைக் கொன்று குவித்துள்ளார். பலியான அக்கம்பக்கத்தாரில் ஆக இளையவருக்கு மூன்று வயது; ஆகப் பெரியவருக்கு 72 வயது. இந்தத் தகவலை வெளியிட்ட ‌ஷின்ஹுவா, அது தொர்பாக வேறு தகவல்களை வெளியிடவில்லை. 20களில் இருக்கும் யாங் சிங்பெய் எனும் சந்தேக நபரான அந்த இளையர் சென்ற புதன்கிழமை சொந்த ஊருக்குச் சென்றார். அதற்கு அடுத்த நாள் யுன்னான் மாவட்டத்தில் உள்ள குன்மிங்கில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Pages