You are here

உல‌க‌ம்

ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி

படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க மக்கள் தங்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்களிக்க வுள்ள நிலையில் ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற் கோ எந்தக் காரணமும் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. ஹில்லரியின் தனிப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் ஆய்வு செய்த விசாரணைக் குழுவினர், அந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் முன்பு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கண்டறிந்ததாக மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கொமே கூறினார்.

மோசுல் நகரிலிருந்து வெளியேறும் மக்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் கடுமையாகச் சண்டை யிட்டு வரும் வேளையில் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாரா நகரில் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அத்தாக்குதலில் சுமார் 100 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. மோசுல் நகரை நோக்கி ஈராக்கிய சிறப்புப் படையினர் முன்னேறிச் செல்லும் வேளையில் மற்ற பகுதிகளில் போராளிகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

சீனாவின் தடைக்கு உட்படுத்தப்படும் ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள்

ஹாங்காங்: பதவிப் பிரமாணத்தை வேண்டுமென்றே தவறாக வாசித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ஹாங்காங் சட்டமன்றத்திலிருந்து தடை செய்யும் பெய்ஜிங் தீர்மானம் “முழுமையாக அமலாக்கப்படும்” என்று ஹாங்காங் தலைவர் கூறினார். ஹாங்காங் சட்டத்திற்கு உட்படாத பதவிப் பிரமாணம் “செல்லுபடியாகாது எனத் தீர்மானித்து, மறுபடியும் பதவிப் பிரமாணம் எடுக்க வாய்ப்பளிக்கப்படாது” என்று ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்டம் பற்றி விளக்கம் அளித்தது பெய்ஜிங்கின் தேசிய மக்கள் காங்கிரஸ்.

துருக்கியில் பிடிபட்ட 2 மலேசியர்களுக்கு ஐஎஸ் நிதியுதவி வழங்கியது

படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த இரண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியாவுக்குச் செல்வதற்கான செலவுகளுக்காக மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு ஐஎஸ் பயங்கரவாதியான முகமது வாண்டி முகமது ஜெடி $1,642 வழங்கியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சிரியாவுக்குச் செல்லும் வழி யில் இவ்விரு பயங்கரவாதிகளும் சென்ற வாரம் இஸ்தான்புல்லில் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் ஜோகூரைச் சேர்ந்த 29 வயது தொழில்நுட்பர்.

மேடையிலிருந்து டிரம்பை வெளியேற்றிய அதிகாரிகள்

படம்: ராய்ட்டர்ஸ்

‘துப்பாக்கி’ என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கூக்குரலிட்டதும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு திரு டிரம்பை (நடுவில்) மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதே வேளையில், போலிஸ் படை உடனடியாக மேடையின் முன்புறம் கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பரிசோதித்து பின் அரங்கத்திலிருந்து வெளியேற்றியது. சிறிது நேரத்துக்குப் பிறகு, துப்பாக்கி எச்சரிக்கை போலி என்பது தெளிவானதும் ஆதரவாளர்களின் ஆரவாரத்துடன் மீண்டும் மேடைக்கு வந்து உற்சாகத்துடன் பிரசாரத்தைத் தொடர்ந்தார் திரு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

18 ஆண்டுகளுக்குப் பிறகு மகாதீர், அன்வாரின் துணைவியர் சந்திப்பு

படம்: கைருதீன் அபு ஹாசன்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவரும் தற்போது சிறையில் இருப்பவருமான அன்வார் இப்ராகிம் ஆகியோர் 18 ஆண்டுகளாக மலேசிய அரசியலில் எதிரிகளாக வலம் வந்த போதிலும் அவர்களது துணைவியர் இருவரும் சந்தித்து 45 நிமிடங்களுக்கு உரையாடியுள்ளனர். இரு தரப்புக்குமான சமரச முயற்சி என இதனை கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலேசியாவில் கடைத்தொகுதிக்கு முன்பாக சுற்றித் திரிந்த முதலை

மலேசியாவில் கடைத்தொகுதிக்கு முன்பாக சுற்றித் திரிந்த முதலை

கோத்தா கினபாலு: கோத்தா கினபாலுவில் உள்ள கரமுன்சிங் கடைத்தொகுதிக்கு முன்பாக இரண்டு மீட்டர் நீள முதலை நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு மணியளவில் சுற்றித் திரிந்தது. அவ்வழியே சென்ற பாதசாரி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் அவ்விடத்துக்கு விரைந்து மூன்று நிமிடங்களுக்குள் முதலையைப் பிடித்தனர். 55 கிலோ எடையுள்ள அந்த முதலை (படம்: தி ஸ்டார்) மிகவும் ஆவேசமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித் தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

டிரம்பிற்கு அதிகரித்து வரும் ஆதரவு

படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர் தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பும் முக்கிய மாநிலங்களில் கடைசிநேர பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.

வெள்ளிக்கிழமை வெளிவந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் டிரம்பைக் காட்டிலும் ஹில்லரி 5 விழுக்காடு முன்னிலையில் இருந்த போதிலும் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய மாநிலங்களில் அவ்விருவருக்கும் இடையே போட்டி கடுமையாகவே உள்ளது.

விடோடோவின் ஆஸ்திரேலியப் பயணம் ரத்து

விடோடோவின் ஆஸ்திரேலியப் பயணம் ரத்து

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பயணத்தை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ரத்து செய்துள்ளார். ஜகார்த்தா ஆளுநரான பசுக்கி ஜஹஜா புர்ணாமா, இஸ்லாமியர் களின் புனித நூலான குரானை அவமதித்ததாக தீவிரவாத கொள்கையுடைய இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த திரு புர்ணாமா, ஜகார்த்தா ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் சீன இனத்தவர் ஆவார். புனித நூலை அவமதித்த தற்காக ஜகார்த்தா ஆளுநர் பதவி விலகக் கோரி வெள்ளிக் கிழமை ஆயிரக்கணக்கானோர் அந்நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

தென்கொரிய அதிபருக்கு எதிராக போராட்டம்; சோல் நகரில் பாதுகாப்பு

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளை யில் சோல் நகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் நேற்று 40,000 பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழி, தேவையில்லாமல் செல்வாக்கு செலுத்த திருவாட்டி பார்க் அனுமதித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

Pages