You are here

உல‌க‌ம்

அமெரிக்க நகரில் அவசரநிலை அறிவிப்பு

சார்லட்: வடகரோலினாவில் உள்ள சார்லட் நகரில் கறுப்பின ஆடவர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 2=வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக் கும் வேளையில் போலிசாருக் கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித் துள்ளது. இதனால் சார்லட் நகரில் அவசரநிலை நடப்பில் இருப்பதாக வடகரோலினா ஆளுநர் பாட் மெக்ரோரி அறிவித் துள்ளார். சார்லட் நகரில் செவ்வாய்க் கிழமை இரவு கெய்த் லாமோண்ட் ஸ்காட் என்ற 43 வயது கறுப் பினத்தவரை போலிசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் மூண்டன.

ஜோகூரில் தாயும் மகளும் கொலை; 8 பேர் கைது

ஜோகூர்பாரு: ஜோகூரில் தாமான் புத்ரி வங்சா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தாயும் அவரது 16 வயது மகளும் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் 8 பேரை கைது செய்திருப்பதாக மாநில போலிஸ் படைத் தலைவர் வான் அகமது நஜிமுதின் முகம்மது கூறினார். கைது செய்யப்பட்ட அந்த 8 பேரில் இருவர், விரைவு பேருந்து மூலம் கோலாலம்பூருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக வான் அகமட் கூறினார். அவ்விருவரிடமிருந்து போலிசார் சில பொருட்களைக் கைப்பற்றினர். அந்தப் பொருட்கள் கொலை செய்யப்பட்ட மாது மற்றும் அவரது மகளின் பொருட் களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தோனீசியாவில் வெள்ளம்; நிலச்சரிவு

படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட குறைந்தது 19 பேர் உயிரிழந் ததாகவும் இன்னும் சிலரைக் காணவில்லை என்றும் அதிகாரி கள் கூறியுள்ளனர். மேற்கு ஜாவாவில் உள்ள காருட் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அப்பகுதி யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் பல இடங்களில் தண்ணீர் 2 மீட்டர் உயரம் அளவுக்கு தேங்கியிருந்ததாகவும் தேசிய பேரிடர் அமைப்பின் பேச்சாளர் சுடோபோ பூர்வோ நக்ரோஹோ கூறினார்.

நியூயார்க் குண்டு வெடிப்பு; அகமது கான் மீது குற்றச்சாட்டு

நியூயார்க் குண்டு வெடிப்பு;   அகமது கான் மீது குற்றச்சாட்டு

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் குண்டு வைத்ததாக ஆப்கானில் பிறந்த 28 வயது அகமது கான் ரஹமி மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சென்ற வாரம் சனிக்கிழமை நியூயார்க், மேன்ஹாட்டன் பகுதி யில் குண்டு வெடித்ததில் 31 பேர் காயம் அடைந்தனர். நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி குண்டு வெடிப்புக்குப் பின்னர் ரஹமி திங்கட்கிழமை நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்டார். போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தகவல்கள் கூறின. போலிசாரை கொலை செய்ய முயன்றதாக ரஹமி மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

சிரியாவில் ஐநா வாகனங்கள் மீது தாக்குதல்; ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: சிரியாவில் ஐநா வாகனங்கள் தாக்கப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனங்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கியது ரஷ்யாவின் இரு போர் விமானங்கள்தான் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனை ரஷ்யா மறுத்துள்ளது. அத்தாக்குதலுக்கு கிளர்ச்சித் தரப்பே காரணம் என்று ரஷ்யா கூறியது. திங்கட்கிழமை ஐநா வாகனங்கள் தாக்கப்பட்டதில் உதவிப் பணியாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 2016-09-22 06:00:00 +0800

எல்லையில் மீண்டும் ஊடுருவல்; 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உருவ பொம்மையை எரிக்கும் இந்திய அரசியல் கட்சியினர். படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் சுவடு மறைவதற்குள் அப்பகுதியில் நேற்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர். லச்சிபூரா பகுதியில் பயங்கர வாதிகள் ஆயுதங்களுடன் நட மாடுவதாக இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் வந்தது. இதனையொட்டி ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். உடனே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகளும் பதிலடி கொடுத்தனர்.

ஜப்பானில் மலாகாஸ் சூறாவளி; 114,000 வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு

ஜப்பானில் மலாகாஸ் சூறாவளி; 114,000 வீடுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு

தோக்கியோ: சக்திவாய்ந்த மலாகாஸ் புயல் ஜப்பானை நேற்று கடுமையாகத் தாக்கியது. இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் தெற்குப் பகுதிகளிலுள்ள போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்காற்று ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்புக்குள்ளாக்கியது. மியாஸக்கி தொகுதியைச் சேர்ந்த நகரங்களில் வாகனங்கள், வீடுகள், நெற்பயிர்கள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை அந்நாட்டின் என்எச்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 578 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சீனா கூட்டு

வடகொரியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றியளித்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அந்நாட்டுத்தலைவர் கிம் ஜோங் உன். படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் சீனப் பிரதமர் லி கெக் கியாங்கும் ஒன்றிணைந்து வடகொரியாவின் அணுவுாயுதச் சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இணைந்து போராட இணக்கம் கண்டுள்ளனர். இதனை வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது. வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் எந்திரத்துடன் கூடிய ஏவுகணைச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. சோகா துணைக்கோளம் பாய்ச்சும் தளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார்.

சமூக ஆர்வலர் ஹாலின் 3 ஆண்டுச் சிறை ஒத்திவைப்பு

சமூக ஆர்வலர் ஆண்டி ஹால்

பேங்காக்: அவதூறு வழக்கு ஒன் றில் பிரிட் டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண் டுச் சிறைத் தண் டனை ஒத்திவைக்கப்பட் டுள் ளது. ஆண்டி ஹால் என்றழைக் கப் படும் அந்த ஆட வர், தாய் லாந் தின் தெற் குப் பகு தி யில் உள்ள பழத் தொ ழிற் சாலை ஒன் றில் சிறார் கள் பணி யில் அமர்த் தப் படு வது, குறைந்த ஊதி யம், மோச மான வேலைச் சூழலில் அவர் கள் படும் இன்னல் போன்ற வற்றைச் சுட் டிக் காட்டி 2013ஆம் ஆண் டில் அறிக்கை ஒன்றை வெளி யிட் டி ருந்தார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று தாக்குதல்கள்; பல கோணங்களில் புலன்விசாரணை

அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று தாக்குதல்கள்; பல கோணங்களில் புலன்விசாரணை

நியூயார்க்: அமெரிக்காவில் 12 மணி நேரத்தில் நடந்த மூன்று தாக்குதல்கள் காரணமாக பயங்கரவாதம் பற்றிய அச்சம் அமெரிக்காவில் அதிகரித்துள்ள தாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று தாக்குதல்களைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐநா கூட்டமும் நடைபெறவுள்ளதால் நியூயார்க்கில் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது.

Pages