You are here

உல‌க‌ம்

புகைமூட்டத்தால் 100,000 பேர் மரணம்

படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக இந்த வட்டாரத்தில் சென்ற ஆண்டு மட்டும் 100,000க் கும் அதிகமானோர் மரணம் அடைந்ததாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. புகைமூட்டப் பாதிப்பால் இந்தோனீசியாவில் 91,000 பேர், மலேசியாவில் 6,500 பேர், சிங்கப்பூரில் 2,200 பேர் மரணம் அடைந்ததாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். “பல உயிர்களைக் கொல்லும் இந்தப் புகைமூட்டத்தைத்” தடுக்க இந்த வட்டார நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு வலியுறுத்துகிறது.

முஷாரப்பின் சொத்துகள் பறிமுதல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துபாய் சென்ற முஷாரப் மீது, அவர் அதிபராக இருந்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் பலவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. பள்ளிவாசல் ஒன்றில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் தொடர்பில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை பாகிஸ்தானுக்கு வர வழைக்குமாறு உள்துறை அமைச்சிடம் வலியுறுத்தப்போவ தாகவும் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘விடுதலை அல்லது வீட்டுக்காவல்’

‘விடுதலை அல்லது வீட்டுக்காவல்’

கோலாலம்பூர்: ஓட்­டு­நர் சைஃபுல் அன்வார் புகா­ரி­யு­டன் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் உறவு கொண்ட­தற்­கா­கத் தற்போது சிறையில் இருக்­கும் அன்வார் இப்­ரா­கிமை குற்­ற­மற்­ற­வர் என விடு­விப்­ப­தற்­கான முயற்­சி­களை அவரது வழக்­க­றி­ஞர் குழு மேற்­கொண்­டுள்­ளது. அது சாத்­தி­ய­மா­கா­த­போது அவ­ருக்கு வீட்­டுக்­கா­வல் விதிக்­கு­மாறு நீதி­மன்றத்­தில் அவர்­கள் கோரிக்கை வைக்க இருப்­ப­தாக ‘வீக்­கெண்ட் ஆஸ்­தி­ரே­லி­யன்’ சஞ்சிகை தெரி­வித்­துள்­ளது. வீட்­டுக்­கா­வ­லுக்கு மலேசிய சட்­டத்­தில் அனுமதி உண்டு.

மலேசியப் பிரதமரின் மனைவி ரோஸ்மாவுக்கு ஐநா விருது

மலேசியப் பிரதமரின் மனைவி ரோஸ்மாவுக்கு ஐநா விருது

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், 64, (படம்: ஏஎஃப்பி) ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’வின் ‘எடுத்துக்காட்டாக வாழ்பவர்’ எனும் பொருள்படக்கூடிய ‘லீட் பை எக்சாம்பள்’ என்ற விருதைப் பெறவிருக்கிறார். ஐநா பொதுச் சபையின் 71வது கூட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் வியாழக்கிழமை நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருமதி ரோஸ்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மலேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ்

சிரியாவின் போர் விமானத்தை  சுட்டு வீழ்த்தியது ஐஎஸ்ஐஎஸ்

பெய்ரூட்: சிரி­யா­வின் கிழக்குப் பகுதியில் சிரியாவின் போர் விமானம் ஒன்றை ஐஎஸ் பயங்க­ர­வாத அமைப்பு சுட்டு வீழ்த்­தி­ய­தாக ஐஎஸ் அமைப்­பின் செய்தி நிறு­வ­ன­மான அமாக் தனது இணை­யப்­பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது. சிரியாவின் பிரச்­சினை­களை ஆறு ஆண்­டு­க­ளா­கக் கண்­ கா­ணித்து வரும் மனித உரிமை கண்­கா­ணிப்­புக் குழு, அந்த போர் விமா­னத்தை ஓட்டிச் சென்ற விமானி கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளது. சுடப்­பட்ட விமானம் ஜெபெல் தர்டா பகு­தி­யில் விழுந்த­தாக சிரிய அர­சாங்கத்­தின் ராணுவ விமானத் தளத்தைப் பார்வை­யிட்டு வரும் அந்தக் கண்­கா­ணிப்­புக் குழு குறிப்­பிட் டுள்ளது.

மின்­ன­சோட்டா கடைத்தொகுதியில் 8 பேருக்கு கத்திக்குத்து

மின்­ன­சோட்டா கடைத்தொகுதியில்  8 பேருக்கு கத்திக்குத்து

மின்­ன­சோட்டா: தனியார் பாது­கா­வ­லர் சீருடை­ய­ணிந்த ஒருவர் மின்­ன­சோட்­டா­வில் உள்ள கடைத்­தொ­குதி ஒன்றில் எட்­டுப்­பேரை கத்­தி­யால் குத்­தினார். ஓய்வில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார். ‘கிராஸ்­ரோட்ஸ் சென்டர்’ கடைத்­தொ­கு­தி­யில் நேற்று முன்தினம் வாடிக்கை­யா­ளர்­கள் நிரம்­பி­யி­ருந்த இரவு வேளையில் இந்தச் சம்ப­வம் நடந்த­தா­கக் கூற­ப்பட்­டது. காய­முற்ற அனை­வ­ரும் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். காய­முற்­ற­வர்­களின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் இல்லை எனவும் அவர்­கள் தேறி­வ­ரு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை­யின் தொடர்பு நிபுணர் கிரிஸ் நெல்சன் சொன்னார்.

பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்

பிரெஞ்சு அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் மோட்டார் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலிசார் கைது செய்தனர். பாரிஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 13,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் கைது

கோத்தா கினபாலு: புருணை செல்லவிருந்த ஒரு விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டிய பாகிஸ்தானியர் ஒருவர் மலேசியாவில் கோத்த கினபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் 62 வயதான பயணி ஒருவர் நேற்று காலை 8.40 மணியளவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர் ஒருவர் அவரிடம் பயண ஆவணங்களைக் கேட்டிருக்கிறார்.

பிரிட்டன் வெளியேற்றம்; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேச்சு

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் முறையான பேச்சைத் தொடங்கக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அதுகுறித்த பேச்சை பிரிட்டன் தொடங்கக் கூடும் என்று திருவாட்டி திரேசா மே தம்மிடம் கூறியதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டோனல்ட் டஸ்க் தெரிவித் துள்ளார்.

சீனாவில் பலத்த சூறாவளிக் காற்றில் சேதமடைந்த பாலம்

சீனாவில் வீசிய சூறாவளிக் காற்றின்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 871 ஆண்டு காலப் பழமைவாய்ந்த ஒரு பாலம் இடிந்து விழுந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர் அல்லது அவர்களைக் காணவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சூறாவளியில் இங்குள்ள பழமை வாய்ந்த ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் அப்பாலம் பெரும் சேதம் அடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த சூறாவளி என்று கூறப்படும் ‘மிரன்டி’ எனும் சூறாவளி சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்மாநிலத்தில் வீசிய மோசமான சூறவாளி இது என்று கூறப் படுகிறது.

Pages