You are here

உல‌க‌ம்

கட்சித் தேர்தலில் அன்வார் போட்டி

கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் எனும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் கட்சித் தலைவர் பதவிக்கு திரு அன்வார் இப்ராகிம் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அஃபிப் பஹார்தின் வேண்டுகோள் விடுத்துள் ளார். தனது இந்த விருப்பத்திற்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சொன்னார். எதிர்காலத்தில் பிரதமர் பொறுப்பை திரு அன்வார் ஏற்பதற்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது பிகேஆர் கட்சித் தலைவராக அன்வாரின் துணைவியார் வான் அசிசா செயல்பட்டு வருகிறார்.

மகாதீர்: நஜிப்பிற்கு எதிராக பழிவாங்கும் செயலில் ஈடுபடவில்லை

புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக தற்போதைய மலேசிய அரசாங்கம் பழிவாங்கும் செயலில் ஈடுபடவில்லை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். திரு நஜிப்பின் குடும்பத்தினர் அவர்களின் கவலையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் திரு மகாதீர் கூறினார். திரு நஜிப் பும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு எதிராக அரசாங்கம் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவ தாக நினைத்தால் இந்த விவ காரத்தை அவர்கள் நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லலாம் என்று திரு மகாதீர் புத்ராஜெயாவில் செய்தியாளர் களிடம் கூறினார்.

குகையைத் துளையிட முயற்சி

படம்: த நேஷன்/ஏசியா நியூஸ் நெட்வொர்க்

தாய்லாந்தில் தாம் லுவாங் குகைக்குள் சிக்கியிருக்கும் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணியில் பேரிடி விழுந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பாளர் ஒருவர் மரண மடைந்தார். இதனால் குகைக்குள் சிக்கி யிருப்பவர்களை மீட்கும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிர டியான நடவடிக்கைகளை எடுத்தாலொழிய சிறுவர்களைக் காப்பாற்றுவது சிரமம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புக்கெட்டில் படகு மூழ்கி 40 பேர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

தாய்லாந்து குகைக்குள் சிக்கி உள்ள 13 பேர் உயிருக்குப் போராடும் வேளையில் அந்நாட் டின் பயணிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் நாற்பது பேர் மாண்டனர். வியாழக்கிழமை படகு மூழ் கியதை நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் தாய்லாந்து அதி காரிகள் உறுதி செய்தனர். புக்கெட் வட்டார கடற் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன என்று கூறிய தாய் லாந்தின் துறைமுக அதி காரிகள், இன்னமும் 16 சீனப் பயணிகளைக் காணவில்லை என்றும் 49 பயணிகள் மீட்கப் பட்டுள்ளனர் என்றும் தெரிவித் தனர்.

வடகொரியா சென்றுள்ள அமெரிக்க அமைச்சர்

வா‌ஷிங்டன்: வடகொரியா சென்றுள்ள அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை பியோங்யாங்கில் சந்தித்துப் பேசி யுள்ளார். திரு கிம்முக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே, சிங்கப்பூரில் நடந்த உச்சநிலை சந்திப்பை அடுத்து இது இடம் பெறுகிறது. சிங்கப்பூரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அணுவாயுத மிரட்டல் முடிந்துவிட்டதாகத் திரு டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அவரும் திரு கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போது கையெழுத்திட்ட உடன் பாட்டில் எந்த தெளிவான கடப் பாடுகளும் குறிப்பிடப்பட வில்லை.

ஜப்பானில் கனமழை: மூவர் மரணம்; பலர் வெளியேற்றம்

தோக்கியோ: ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறு மற்றும் ஏரிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மாது உட்பட மூவர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். இன்னும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர். கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 210,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நஜிப்: என்னை மகாதீர் வெறுக்கத் தொடங்கியதற்கான காரணங்கள்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தன்னை மலேசியாவின் தற்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது வெறுக்கத் தொடங்கியதற்கான காரணங்களுள் ‘1 மலேசியா’ திட்டமும் ஒன்று என்று கூறியுள் ளார். தங்கள் இருவருக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை திரு நஜிப் மலேசியா கினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனது திட்டங்களும் கொள்கை முடிவுகளும் திரு மகாதீருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் திரு நஜிப் கூறினார். “பிரதமராக நான் பொறுப்பேற்ற பிறகு ஆரம்ப காலத்திலும் 2009ஆம் ஆண்டுக்கு அப்பாலும் எங் களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்து வந்தது,” என்று திரு நஜிப் கூறினார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு; சீனா அதிருப்தி

வா‌ஷிங்டன்: சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா நேற்று அந்த வரிகளை வசூலிக்கத் தொடங் கியது. மேலும் $500 பில்லியன் மதிப்பிலான சீன இறக்குமதிகளின் மீது வரிகளை தான் விதிக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித் திருக்கிறார். சீன இயந்திரங்கள், மின்னியல் பொருட்கள், கணினி பாகங்கள், ‘எல்ஈடி’ தொலைக்காட்சி திரை கள் உள்ளிட்ட 818 பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் மீது திரு டிரம்ப் 25% வரியை விதித்துள்ளார்.

டோமியை தகுதி நீக்கம் செய்ய நஜிப் விண்ணப்பம்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸை தகுதி நீக்கம் செய்யக் கோரி திரு நஜிப் விரைவில் உயர் நீதிமன்றத்தில் முறையாக விண்ணப்பம் செய்யவிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரத்திற் குள் அந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக திரு நஜிப்பின் வழக்கறிஞர் குழுத் தலைவர் ஷஃபி அப்துல்லா தெரி வித்துள்ளார்.

மெக்சிகோ பட்டாசு கிடங்கில் அடுத்தடுத்து வெடிப்புகள்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பட்டாசு கிடங்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளில் தீயணைப்பாளர்கள் நால்வர் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த வெடிப்புகளைத் தொடர்ந்து போலிசாரும் தீயணைப்பாளர்களும் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதாக தகவல்கள் கூறின. டுல்டிபெக் நகரில் அந்த பட்டாசு கிடங்கு உள்ளது. அங்கு ஏற்பட்ட தொடர் வெடிப்புகளையடுத்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்ததாகவும் அருகில் உள்ள சந்தைப் பகுதி சேதம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

Pages