You are here

உல‌க‌ம்

தாய்லாந்தில் வெள்ள அபாயம்

பேங்காக்: தாய்லாந்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. இதனால் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் தாய்லாந்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனே உயரமான இடங்களுக்கு மாறக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பெட்சபூரி, காஞ்சனாபூரி, பிரச்சுவப் கிரி கான் ஆகிய மாகாணங்கள் அருகிலுள்ள பெரிய அணைகள் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை நேற்று முன்தினம் விடுக்கப்பட்டது.

ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகள்

வா‌ஷிங்டன்: ஈரான் நாட்டுடன் உலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ஈரான் மீதான புதிய தடைகளை அமெரிக்கா நடப்புக்கு கொண்டுவரும் என்று தெரிவித் துள்ளார். புதிய தடைகள் மூலம் ஈரானை நெருக்குவதால் அந்நாடு அதன் அணுவாயுத நடவடிக்கை களை நிறுத்த வழிவகுக்கும் என்றும் திரு போம்பியோ கூறினார்.

வெனிசுவேலாவில் ‘வெடிகுண்டு டிரோன்’ தாக்குதல்: தப்பினார் அதிபர்

கரகாஸ்: வெனிசுவேலாவில் நடத் தப்பட்ட ‘வெடிகுண்டு டிரோன்’ தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோ காயமின்றி தப்பினார். ராணுவ விழா ஒன்றில் கலந்து கொண்டு அதிபர் மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பல டிரோன்கள் (ஆளில்லா வானூர்தி) அவர் இருந்த இடத்துக்கு அருகே வெடித்தன. இந்தத் தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். “இது அதிபர் மடுரோவுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்,” என்று சம்பவத்துக்குப் பிறகு வெனிசுவேலாவின் தொடர்புத் துறை அமைச்சர் ஜார்ஜி ரோட்ரிகுவேஸ் தெரிவித்தார்.

தலைவரானார் அன்வார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கெஅடிலான் கட்சியின் புதிய தலைவராக திரு அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்குள் வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண் டும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் திரு அன்வாரை எதிர்த்து யாரும் போட்டியிடாத தால் அவர் கட்சியின் தலைவர் என அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டார்.

பங்ளாதேஷ் ஆர்ப்பாட்டம்: மாணவர்களை அடக்க நாடெங்கும் திறன்பேசி இணையச் சேவை துண்டிப்பு

டாக்கா: பங்ளாதே‌ஷில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கி வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர பங்ளாதேஷ் போலிசார் நடவடிக் கைகள் எடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டம் மோசமடையாமல் இருக்க திறன்பேசிகளுக்கான இணையச் சேவையை அந்நாட்டு அதிகாரிகள் துண்டித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட வேக வரம் பைத் தாண்டி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கடந்த வாரம் இரண்டு கல்லூரி மாணவர்கள் மீது மோதியது. இதில் அந்த இரு மாணவர்களும் மாண்டனர். இந்தச் சாலை விபத்தால் ஏற்பட்ட மரணங்களால் பங்ளாதேஷ் கல்லூரி மாணவர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

மக்களுடன் இணைந்து அதிபர் ஜோக்கோவி சாதனை முயற்சி

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் சாலைகளில் ‘பொக்கோ பொக்கோ’ நடனத்தை நேற்று ஆடிக்கொண்டிருந்த பல்லா யிரக்கணக்கான மக்களுடன் இந்தோனீசிய அதிபர் ஜோக் கோ விடோடோவும் சேர்ந்து ஆடினார். இந்தோனீசியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு களைக் கொண்டாடுவதற்காக அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்டத்திற்கு ஆக நீளமான வரிசையை அமைத்து அதனை கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதே நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் நோக்கம். இவர்கள் மட்டுமின்றி ஏறத்தாழ 120,000 சிறைக் கைதிகள், அவரவர் சிறை களில் இருந்தபடியே ஆடிக் கொண்டிருந்தனர்.

ஜோ லோவின் சொகுசுக் கப்பலை ஒப்படைக்க கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா: மலேசிய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நிதியாளர் லோ டெக் ஜோவுக்குச் சொந்தமான ‘இகுவெனிமிட்டி’ என்ற சொகுசுக் கப்பல், இந்தோனீ சியாவிலுள்ள பாத்தாம் தீவுக்கு அருகில் இருப்பதாக மூத்த கடற் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ‘ ‘ஜோ லோ’ என அழைக்கப்படும் லோவின் கப்பலை இந்தோனீசி யாவிடமிருந்து பெற மலேசிய அரசாங்கம் தேவையான ஏற்பாடு களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பல் இன்று பாத்தாமின் ‘பத்து அம்பார்’ துறைமுகத்தை அடையும் என்றும் ‘தி ஸ்டார்’ நாளிதழ் தெரிவித்தது.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பங்ளாதே‌ஷில் மாணவர்கள் 7வது நாளாக ஆர்ப்பாட்டம்

பங்ளாதே‌ஷில் ஒரு பேருந்து விபத்தில் இரு இளையர்கள் கொல்லப்பட்டதையடுத்து சாலை பாதுகாப்பு மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டாக்காவின் பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நேற்று 7வது நாளாக நீடித்த வேளையில் டாக்காவில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிச் சீருடையில் வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். படம்: ஏஎஃப்பி

1எம்பிடி: உல்லாசப் படகை மலேசியாவிடம் ஒப்படைக்க இந்தோனீசியா இணக்கம்

கோலாலம்பூர்: இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலித் தீவில் பறிமுதல் செய்யப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலர் (1பில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான உல்லாசப் படகை மலேசியாவிடம் ஒப்படைக்க இந்தோனீசியா இணங்கியிருப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இந்த உல்லாசப்படகு மலேசிய அரசாங்க நிதி சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. மலேசிய அரசாங்கம் தற்போது தேடி வரும் ஜோ லோ, 1எம்பிடி நிதியைப் பயன்படுத்தி வாங்கிய உல்லாசப் படகு இது என்று கூறப்படுகிறது. அமெரிக்க நீதித்துறை இலாகா செய்த விண்ணப்பத்தின் அடிப் படையில் இந்தோனீசியா இப் படகை பிடித்து வைத்திருந்தது.

சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி

கோலாலம்பூர்: ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்ட சிலாங்கூர், சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இம்முறை இங்கு மும்முனைப் போட்டி நிலவியது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முகம்மட் ஷவாவியும் தேசிய முன்னணி சார்பில் லோக்மான் நூர் மற்றும் சுயேச்சை வேட்பாளராக கே. மூர்த்தி ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டனர். இரவு 8 மணியளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பக்கத்தான் ஹரப்பான் வேட் பாளர் ஷவாவி 12,984 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

Pages