You are here

உல‌க‌ம்

மகாதீர்: மக்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் நீக்கப்படும்’

லங்காவி: தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் உட்பட பல சட்டங்களில் சாத்தியமான திருத்தங்களைச் செய்யலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று பிரதமர் மகாதீர் நேற்று தெரிவித் தார். முன்னைய அரசாங்கம் இத் தகைய சில சட்டங்களைப் பயன் படுத்தி மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியதால் பரிசீலனைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது என்று அவர் சொன் னார். “பெரும்பாலான சட்டங்கள் மக்கள் சுதந்திரமாக பேசுவதை தடுக்கிறது. பத்திரிகை சுதந் திரத்தையும் கட்டுப்படுத்துகிறது.

‘தோற்றவர்களுடன் கைகோப்பேன்’

கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தேர்த லில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட அஹமட் ஸாஹிட் ஹமிடி தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுடன் கைகோத்து அவர்களுடைய யோச னைகளை ஏற்று கட்சியின் பெரு மையை உயர்த்தப்போவதாக சூளு ரைத்துள்ளார். திரு ஸாஹிட், 190 அம்னோ பிரிவுகளில் 99 பிரிவுகளின் ஆதர வைப் பெற்றுள்ளார். ஒரு பிரிவில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு 90,000க்கும் மேல் வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் 42 விழுக்காடு. இது, தலைமை பதவியில் மாற்றம் வேண்டும் என்பதையே புலப்படுத்துகிறது.

லிபியா அருகே படகு மூழ்கியதில் 3 குழந்தைகள் உட்பட பலர் பலி

டிரிபோலி: அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகு லிபியா அருகே கடலில் மூழ்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் படகில் அகதிகள் 120 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 16 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று லிபியப் படையினர் தெரிவித் துள்ளனர்.

குகைக்குள் பல வழிகளில் தீவிர தேடுதல் பணி

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு குகைக்குள் கடந்த ஒரு வாரமாக சிக்கியுள்ள 16 இளையர் களையும் பயிற்றுவிப்பாளரையும் மீட்க ராணுவம், போலிசார், தொண்டூழியர்கள் ஆகியோருடன் சேர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த குகைக்குள் நுழையக் கூடிய புதிய வழிகளைக் கண்டறிய நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த குகைக்குள் நிரம்பியுள்ள நீர்மட்ட அளவு மற்றும் அந்தக் குகை நிலவரம் பற்றிய தகவல் களை அறிந்துகொள்ள நீருக்கடி யில் செல்லும் ரோபோட் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் கூறினர்.

குகைக்குள் இளையர்கள்; தாய்லாந்து பிரதமர் நேரில் ஆய்வு

படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருக்கும் 12 இளையர் களையும் அவர்களுடைய பயிற்று விப்பாளரையும் மீட்கும் பணி நேற்று 6வது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில் பிரதமர் பிரயூட் சான்-ஓ-ச குகையை நேரில் பார்வையிட்டு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி னார். கடந்த சனிக்கிழமை அன்று 11 முதல் 16 வயது வரையிலான இளையர்களும் 25 வயது பயிற்று விப்பாளரும் காணாமல் போயி னர். சியாங் ராயில் உள்ள தாம் லுவாங் குகையை ஆராய முற் பட்டபோது அவர்கள் அதற்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படு கிறது. வெள்ளம் அபாயமுள்ள பகுதி என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி இளையர்கள் குகைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

குமுறும் எரிமலை; பாலியில் தவிக்கும் பயணிகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலி விமான நிலையம் எரிமலைச் சாம்பல் பரவியதன் காரணமாக ஏறக்குறைய 12 மணி நேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையம் மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தோனீசியாவின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பாலியில் இருக்கும் விமான நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை அதி காலை 3 மணிக்கு மூடப்பட்டது.

இந்தோனீசியாவுடன் வலுவான உறவுக்கு மகாதீர் நம்பிக்கை

போகோர்: இந்தோனீசியாவுடன் வலுவான உறவைக் கொண் டிருக்க மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித் துள்ளார். தென் கிழக்கு ஆசியாவின் இரு நாடுகளும் இரு தரப்பு ஒத் துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வு மேம் பட்டு நீடித்திருக்க வேண்டும்,” என்று இந்தோனீசியாவில் போ கோரில் பேசிய மகாதீர் குறிப் பிட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி, கோபம், அழுகை

ஒருபக்கம் ‘குட்பை’ என்ற முழக்கம், மறுபக்கம் அதிர்ச்சித் தோல்வி தந்த அமைதி என தங் கள் நாடு உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகளிலிருந்து வெளி யேற நேரிட்டதை எண்ணி ஜெர்மானிய ரசிகர்கள் என்ன செய்வ- தென்று தெரியாமல் திணறினர். “உலகக்கிண்ணக் காற் பந்துக் கனவுகள் சிம்மசொப்பன மாக மாறியது,” என்று தலைப்பிட்டு தி பில்டு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

நஜிப்: பொருட்களின் மதிப்பு $300 மில்லியன் இருக்காது

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான பல வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட விலை உயர்ந்த நகைகள், கைப்பைகள், கடிகாரங் கள் மற்றும் ரொக்கப் பணம் இவற்றின் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட் (S$304 மில்லியன்) என்று போலிசார் தெரிவித்துள்ள நிலையில் அதனை திரு நஜிப் மறுத்துள்ளார். கைப்பற்றப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை தனக்கும் தன் மனைவிக்கும் அன்பளிப்பாக கிடைத்த பரிசுப் பொருட்கள் என்று திரு நஜிப் கூறியுள்ளார்.

குகைக்குள் தேடும் பணியில் அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கிக்கொண்ட காற் பந்துக் குழு உறுப்பினர்கள் 12 பேர் மற்றும் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணி தொடரும் வேளையில் அவர் களுக்கு உதவ அமெரிக்க ராணுவ வீரர்களும் பிரிட்டிஷ் முக்குளிப்பாளர் களும் அங்கு சென்றுள்ளனர். அந்த குகைக்குள் அதிகரித்து வரும் நீர் மட்டம் தேடும் பணிக்கு தடங்கலாக இருப்பதாகக் கூறப் படுகிறது. அந்த குகையின் நுழை வாயிலில் நீர் நிரம்பி இருப்பதால் குகைக்குள் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றும் பணியை முக்குளிப் பாளர்கள் நிறுத்தியுள்ளனர்.

Pages