You are here

உல‌க‌ம்

சிங்கப்பூருக்கு வருகையளித்த மலேசிய தலைவர்கள்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய உள்துறை அமைச் சர் முஹைதீன் யாசினைப் பார்க்க மலேசியப் பிரதமர், துணைப் பிர தமர் உள்ளிட்ட தலைவர்கள் இங்கு வருகை புரிந்தனர். திரு முஹைதீன், 71, கணை யத்தில் கட்டி இருந்ததால் சிங் கப்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து மருத் துவமனையிலேயே தங்கி தேறி வருகிறார் அவர்.

கார் நிறுத்துமிடத்தில் தடுமாறி விழுந்த ஹெலிகாப்டர்

சீனா தலைநகர் பெங்ஜிங்கில் நேற்றுக் காலை ஹெலிகாப்டர் ஒன்று கார் நிறுத்துமிடத்தில் மோ தியது. கூட்டத்தினரைத் தவிர்க் கும் பொருட்டு ஹெலிகாப்டரை அதன் ஓட்டுநர் திருப்பியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக ‘பெய் ஜிங் யூத் டெய்லி’ என்னும் அர சாங்க ஊடகம் குறிப்பிட்டது. ரீன்உட் ஸ்டார் விமானப் போக் குவரத்து நிறுவனத்துக்குச் சொந் தமான அந்த ஹெலிகாப்டரின் மூக்குப் பகுதி தரையில் மோதி கீழே சாய்ந்ததாக சீன சமூக ஊடகமான வெய்போ தெரிவித்தது.

பினாங்கில் திடீர் வெள்ளப்பெருக்கு; வீடுகளுக்குள் தவித்த மக்கள்

கோலாலம்பூர்: பினாங்கில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்களால் வெளியில் வர முடியவில்லை. அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் அந்த இடங்களுக்குச் சென்று வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றியதாக தீயணைப்புப் படைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK

மகாதீர்: புதிய கார் தயாரிப்பு திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படும்

கோலாலம்பூர்: புதிய கார் தயாரிப்புத் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் மீண்டும் பரிசீலித்து வருவதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் என்றும் திரு மகாதீர் கூறினார். “வெளிநாடுகளிலிருந்து வாகனங்கள் எளிதாக மலேசியாவுக்குள் வருவதைத் தடுக்க நிபந்தனைகளை விதிப்பதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டியுள்ளது,” என்று திரு மகாதீர் கூறினார்.

MH370 அறிக்கையில் புதிய தகவல் இல்லை

புத்ராஜெயா: மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானம் என்ன ஆனது? அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அது பற்றிய புதிர் நீடிக்கவே செய்கிறது. விசாரணைக் குழுவினரின் அறிக்கையை எதிர்பார்த்து காத் திருந்த விமானப் பயணிகளின் குடும்பத்தினருக்கும் உறவினர் களுக்கும் எஞ்சியது ஏமாற்றமே. விசாரணைக் குழுவினர் நேற்று வெளியிடட இறுதி அறிக்கையில் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத் தினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட மலையேறிகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது இந்தோனீ சியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேறிகள் சுமார் 500 பேர் ரிஞ்சானி மலை அடிவாரத்தில் சிக்கிக்கொண்டனர். நிலநடுக் கத்தைத் தொடர்ந்து அப்பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த மலையேறிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் பாது காப்பாக வெளியேற்றுவதில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். லொம்போக் சுற்றுலாத் தீவில் நேற்று ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் 162 பேர் காயம் அடைந்ததாகவும் அதி காரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் பல வீடுகள் நாசமாகின.

இந்தோனீசிய நிலநடுக்கத்தில் 14 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான லொம்போக் தீவுப் பகுதியை நேற்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் 160க்கும் அதிகமானோர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் களில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவரும் அடங்குவார்.

ஜப்பானில் பயங்கர புயல்; இருளில் மூழ்கிய 150,000 வீடுகள்

தோக்கியோ: ஜப்பானில் பயங்கர புயல்காற்று வீசுவதுடன் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ‘ஜாங்டரி’ என்று பெயரிடப் பட்டுள்ள புயல் தாக்கும் வேளையில் தோக்கியோ விலும் ஹான்சு தீவுப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயல் காற்று, இடைவிடாது பெய்யும் மழை இவற்றின் காரணமாக சுமார் 150,000க்கும் மேற்பட்ட வீடு களுக்கு மின்சார விநியோகம் கிடைக்காமல் அவை இருளில் மூழ்கியதாக ஜப்பானிய ஒலிபரப்புக் கழகத் தகவல் தெரிவிக்கிறது.

மியன்மாரில் வெள்ளப்பெருக்கு: 5 பேர் மரணம், பலர் வெளியேற்றம்

யங்கூன்: மியன்மாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 54,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘கம்போடியத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை’

நோம்பென்: கம்போடியாவில் நேற்று நடந்த வாக்களிப்பு சுதந் திரமாகவோ அல்லது நியாய மாகவோ நடைபெறவில்லை என்று மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன. இந்தத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக் கணித்ததால் பிரதமர் ஹூன் சென்னை எதிர்த்து மிகச் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களே போட்டியிட்டனர். 33 ஆண்டு காலமாக பிரதமராக நீடிக்கும் ஹூன்சென் இந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர்.

Pages