You are here

உல‌க‌ம்

சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதை திட்டத்தால் நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம்

பெய்ஜிங்: சீனாவின் பெருந் திட்டமான வர்த்தக இணைப்புப் பாதையில் இடம்பெற்றுள்ள நாடு கள் சீனாவிடம் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரி வித்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டில் அந்தப் பெருந்திட்டத்தைச் சீன அதிபர் ஸி ஜின்பிங் அறிவித் திருந்தார். புதிய ‘சில்க் ரோடு’ என்றும் அழைக்கப்படும் அந்த திட்டத்தின் மூலம் உலக முழுவதும் ரயில்வே கட்டுமானப்பணி, சாலை, துறை முகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று அதிபர் ஸி கூறியிருந்தார். இதன் ஒரு பகுதியாக பல நாடுகளுக்கு பல பில்லியன் டாலர் கடன் வழங்கப்படும் என்றும் சீனா அறிவித்திருந்தது.

அன்வார் போட்டியிட மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் தேர்வு

மலேசியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருப்பவர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் அன்வார் இப்ராகிம் நாடாளுமன் றத்துக்குத் தேர்ந்து எடுக்கப் படுவதைச் சாத்தியமாக்கும் வகை யில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தான் போட்டியிட போகும் தொகுதி பற்றி இதுவரை அன்வார் வாய் திறக்கவில்லை. “எந்தவித முடிவும் எடுக்க வில்லை. அதனால் போட்டியிடும் தொகுதி பற்றி தற்போது தெரி விக்க முடியவில்லை,” என்றார் அன்வார் இப்ராகிம். “இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் வரை எனக்காகத் தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளனர்.

மகாதீர்: பூமிபுத்ராக்கள் சுயமாக முன்னேற வேண்டும்

கோலாலம்பூர்: பூமிபுத்ராக்கள் எனப்படும் மலேசிய மண்ணின் மைந்தர்கள் சுயமாக முன்னேற வேண்டும் என்றும் தங்கள் எதிர் காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.

டிரம்ப்பின் பணியில் 60% மக்களுக்கு திருப்தி இல்லை

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆற்றும் பணி திருப்தியளிக்கவில்லை என்று 60% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். திரு டிரம்ப்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதாக 50 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப் ஆற்றி வரும் பணிகள் சிறப்பாக உள்ளது என்று 36% அமெரிக்கர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

கிம் ஜோங் நாம் கொலை வழக்கு: தேடப்படும் மேலும் இருவர்

கோலாலம்பூர்: கிம் ஜோங் நாம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க இரு இந்தோனீசியப் பெண்களை மலேசியப் போலிசார் தேடி வருகின்றனர்.

தேடப்படும் ரைசா ரின்டா சல்மா, டேசி மெரிசின்டா ஆகிய இருவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சிலாங்கூர் போலிஸ் படைத் தலைவர் ஃபாட்ஸில் அகமட் கூறினார். அவர்கள் இருக்கும் இடம் பற்றி அறிந்தவர்கள் போலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆசிய உச்சநிலைக் கூட்டங்களில் டிரம்ப்பிற்குப் பதிலாக மைக் பென்ஸ்

வா‌ஷிங்டன்: சிங்கப்பூரிலும் பாப்புவா நியூகினியிலும் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளின் உச்சநிலைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரி வித்துள்ளது.

திரு டிரம்ப்பிற்குப் பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்றும் வெள்ளை மாளிகை அறி வித்துள்ளது. சிங்கப்பூரில் வரும் நவம்பர் மாதம் ஆசியான் -அமெரிக்க கூட்டமும் கிழக்கு ஆசிய உச்சநிலைக் கூட்டமும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாப்புவா நியூகினியில் ஏபெக் எனப்படும் ஆசிய பொருளி யல் வட்டாரக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

நியூயார்க்: பாலஸ்தீன அகதிகளின் செலவுகளுக்காக அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிதி செலவினங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் திருப்திகரமாக இல்லாததால் இனிமேலும் பாலஸ்தீன அகதிகளின் நல்வாழ்வுக்கு நிதி வழங்கும் திட்டத்தை தொடர முடியாது என்றும் அமெரிக்காவின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்திவிட அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்ததாகவும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் காற்றுக் கசிவு

வா‌ஷிங்டன்: அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிறு மோதல்கள் ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களால் உண்டான காற்றுக் கசிவினை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாறை போன்ற ஒன்று விண்ணில் பறந்தது இதன் மீது பட்டதால் இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அதனால் இரண்டு மில்லி மீட்டர் அளவிற்கு ஓட்டை ஏற்பட்டது. விண்வெளி வீரர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விண்வெளி மையத்தில் உள்ள ஆறு பேருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஹூஸ்டன், டெக்சஸ் மற்றும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன.

தென்கொரியப் பள்ளிகளில் காப்பிக்கு தடை

சோல்: தென்கொரியப் பள்ளிகளில் காப்பி விற்பனை கூடிய விரைவில் தடைசெய்யப்படவுள்ளது. இன்னும் இரு வாரங்களில் அது நடப்புக்கு வரும். காப்பியில் உள்ள அதிகப்படி யான ‘கஃபேன்’ எனும் மூலப் பொருளை உட்கொண்டால் தலை சுற்றல், சீரற்ற இதயத் துடிப்பு, தூக்கப் பிரச்சினைகள் உள்ளிட் டவை ஏற்படக்கூடும் என்பதால் காப்பிக்குத் தடை விதிக்கப்படுவ தாகத் தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரியப் பள்ளிகளில் ‘கஃபேன்’ அதிகம் கொண்ட உணவு, பானங்களை மாணவர்கள் வாங்க ஏற்கெனவே தடை விதிக்க ப்பட்டிருந்தது.

உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற போவதாக டிரம்ப் மிரட்டல்

வா‌ஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பு அமெரிக் காவை நடத்தும் விதத்தை மாற்றிக்கொள்ளப் போவ தில்லை என்றால் அதில் இருந்து விலகப் போவதாக அந் நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அச்சு றுத்தியுள்ளார். “அவர்கள் மாறவில்லை என் றால் நான் உலக வர்த்தக அமைப்பி லிருந்து வெளியேறுவேன்” என புளூம்பெர்க் செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும் நாடு களுக்கு இடையே ஏற்படும் சச்சர வுகளைத் தீர்க்கவும் உலக வர்த் தக அமைப்பு நிறுவப்பட்டது.

Pages