You are here

சிங்க‌ப்பூர்

‘லாட்டரி’ முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்

பேரங்காடிகளில் காணப்படும் இயந்திரங்கள் பத்து வெள்ளி கட்டணத்தில் வழங்கும் மர்மப் பெட்டியில் திறன்பேசி, ஆடம்பரக் கைப்பை இருப்பதாக அவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங் கள் கூறினாலும் பெரும்பாலான பெட்டிகளில் நாணயப் பை, யுஎஸ்பி சார்ஜர் போன்ற விலை குறைந்த பொருட்களே உள்ளன. இதன் தொடர்பாகப் பணத் தைப் பெற்றுக்கொண்டு மர்மப் பரிசுகளை வழங்கும் இத்தகைய லாட்டரி முறை இயந்திரங்கள்வழி சில வியாபாரிகள் பொதுச் சூதாட்ட மனைகள் சட்டத்தை மீறுவதாக போலிஸ் பேச்சாளர் கூறினார்.

கைபேசியில் ஆபாசப் படம் எடுத்த ஆடவரைப் பிடித்தவருக்குப் பாராட்டு

பெண்ணின் பாவாடைக்குள் தன் கைபேசிவழி படம் பிடித்த 27 வயது ஆடவரைக் கையும் களவுமாகப் பிடித்த 26 வயது பொறியாளர் திரு கோ டொங் என் பொதுநல உணர்வுடன் செயல்பட்டதற்காகப் பாராட்டுப் பெற்றார். பொது போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியத்தில் நேற்று நடைபெற்ற போலிசார் விருதளிப்பு நிகழ்ச்சியில் கோவுக்கு பொதுநல உணர்வுமிக்கச் செயலுக்கான போலிஸ் விருது வழங்கப்பட்டது.

1,249ஆக அதிகரித்துள்ள கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்கள்

கை, கால், வாய்ப் புண் நோய் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை ஜூலை 29க்கும் ஆகஸ்ட் 4க்கும் இடைப் பட்ட வாரத்தில் 1,249 ஆனது. இது இவ்வாண்டின் ஆக அதிகமான எண்ணிக்கை என்று அண்மைய புள்ளி விவ ரங்கள் தெரிவித்துள்ளன. இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு இருந்த 868 கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்களைவிட இது ஒன்றரை மடங்கு அதிகம். கை, கால், வாய்ப் புண் நோயினால் பினாங்கு மாநிலத் தில் 17 மாத ஆண் குழந்தை இவ்வாண்டு ஜூன் மாதம் இறந்த சம்பவம், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்நோய் குறித்த பதற்றம் நிலவி வருகிறது.

உணவுக்கடைக்காரர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனையில் ஈடுபட உதவி

தேசிய சுற்றுப்புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றின்கீழ் உள்ள 12,000 உணவுக்கடைகளின் மின்-கட்டண முறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிகபட்சமாக இரண்டு பிரதான நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன. நிறுவனங்களை ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு, தேசிய சுற்றுப்புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகள் நியமிக்கும். இதன்வழி அனைத்து கட்டணமுறைகளும் ஒரே பிரதான கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்படுவதுடன் வியாபாரங்களுக்கும் கூடுதல் செலவாகிறது.

பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்க 80 நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

தங்களின் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுடன் செய்யப் படும் ஒப்பந்தங்களில் ஒரேவித மான நடைமுறைகள் அமையவேண் டும் என்று 80 பாதுகாப்பு நிறுவ னங்கள் தொழில்சார்ந்த விதிமுறை களை வரையறுக்க ஒருங்கி ணைந்துள்ளன. குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்துவது, சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பது, சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது, ஒப்பந்தங் களை ரத்து செய்வது போன்றவை இதில் அடங்கும்.

சிங்கப்பூர் தம்பதி மீது முயிஸ் நடவடிக்கை

சிங்கப்பூரில் மாறுபட்ட இஸ்லாமிய சமய நடவடிக்கைகளைப் பிரபலப் படுத்த முயன்ற சிங்கப்பூர் ஜோடி ஒன்றின் மீது முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன் றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஜோடி பற்றிய புகார் தங் களுக்குக் கிடைத்ததன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்று முயிஸ் விளக்கியது.

‘அலிபாபா’ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பக் காட்சி நிலையம்

சீனாவின் தொழில்நுட்ப நிறுவன மான அலிபாபா, புதிய தொழில் நுட்பக் காட்சி நிலையத்தை சிங்கப்பூரில் திறந்து வைப்பதாக அறிவித்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் உணர் கருவிகள், மெய்நிகர் தொழில் நுட்பம் போன்ற வற்றைக் கடைச்சூழலில் பயன் படுத்தும் அனுபவத்தை அந்த காட்சி நிலையம் வருகையா ளர்களுக்கு வழங்கும். ‘கிளவுட்’ தொழில்நுட்பத்தை வழங்குவதில் கூகுள், அமெசான் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அனைத்துலக அளவில் கடும் போட்டியை எதிர்நோக்கும் தறு வாயில் அலிபாபா இந்த மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தனியார் வீடுகளின் விற்பனை உயர்ந்தது

தனியார் வீடுகளின் விற்பனை, கடந்தாண்டு ஜூலையுடன் ஒப்பு நோக்க இவ்வாண்டு ஜூலையில் 55% உயர்ந்தது-. கடந்த மாதம் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த ஒரு நாளைக்கு முன்னர் பலர் வீடுகளை அவ சரமாக வாங்கியது இந்த உயர் வுக்குக் காரணம் எனக் கருதப் படுகிறது. சொத்து மேம்பாட்டாளர்கள் கடந்த மாதம் 1,724 தனியார் வீடுகளை விற்றனர். இந்த எண் ணிக்கை, ஜூன் மாதத்தில் விற் பனையான 654 வீடுகளைவிட 2.6 மடங்கு அதிகம். கடந்தாண்டு ஜூலையில் அந்த எண்ணிக்கை 1,112 ஆக இருந்தது.

தொடக்கநிலை, உயர்நிலை வகுப்புகள் ஜனவரி 2ல் தொடங்கும்

கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் கல்வியாண்டு ஜனவரி 2ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கும். கல்வி ஆண்டின் இறுதி நாள் நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்றும் நேற்று கல்வி அமைச்சு அறிவித்தது. தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லெனிய கல்விக் கழகத்திலும் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குவார்கள். மற்ற மாணவர்கள் ஜனவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குவர். இளையர் தினம் ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுவதால் மறுநாள் பள்ளி விடுமுறையாக அமையும்.

சிங்கப்பூர் வங்கிகள் எதிர்நோக்கும் நெருக்கடி

சிங்கப்பூர் வங்கிகளுக்கு வரும் காலாண்டு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துச் சந்தையை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரிக்கும் வர்த்தக பதற்றம் போன்றவை வங்கிகளின் கடன் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் வங்கிகளின் 2018, 2019ஆம் ஆண்டுக்கான கடன் வளர்ச்சி முன்னுரைப்பை முறையே 5.0, 4.5 விழுக்காடு என்று குறைத்துள்ளதாக ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ என்ற அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டது.

Pages