You are here

சிங்க‌ப்பூர்

தனியார் வீடுகளின் விற்பனை உயர்ந்தது

தனியார் வீடுகளின் விற்பனை, கடந்தாண்டு ஜூலையுடன் ஒப்பு நோக்க இவ்வாண்டு ஜூலையில் 55% உயர்ந்தது-. கடந்த மாதம் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த ஒரு நாளைக்கு முன்னர் பலர் வீடுகளை அவ சரமாக வாங்கியது இந்த உயர் வுக்குக் காரணம் எனக் கருதப் படுகிறது. சொத்து மேம்பாட்டாளர்கள் கடந்த மாதம் 1,724 தனியார் வீடுகளை விற்றனர். இந்த எண் ணிக்கை, ஜூன் மாதத்தில் விற் பனையான 654 வீடுகளைவிட 2.6 மடங்கு அதிகம். கடந்தாண்டு ஜூலையில் அந்த எண்ணிக்கை 1,112 ஆக இருந்தது.

தொடக்கநிலை, உயர்நிலை வகுப்புகள் ஜனவரி 2ல் தொடங்கும்

கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் கல்வியாண்டு ஜனவரி 2ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கும். கல்வி ஆண்டின் இறுதி நாள் நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்றும் நேற்று கல்வி அமைச்சு அறிவித்தது. தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லெனிய கல்விக் கழகத்திலும் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குவார்கள். மற்ற மாணவர்கள் ஜனவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குவர். இளையர் தினம் ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுவதால் மறுநாள் பள்ளி விடுமுறையாக அமையும்.

சிங்கப்பூர் வங்கிகள் எதிர்நோக்கும் நெருக்கடி

சிங்கப்பூர் வங்கிகளுக்கு வரும் காலாண்டு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துச் சந்தையை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரிக்கும் வர்த்தக பதற்றம் போன்றவை வங்கிகளின் கடன் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் வங்கிகளின் 2018, 2019ஆம் ஆண்டுக்கான கடன் வளர்ச்சி முன்னுரைப்பை முறையே 5.0, 4.5 விழுக்காடு என்று குறைத்துள்ளதாக ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ என்ற அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டது.

நன்றி தெரிவித்த அதிபர்

இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்களுக்கும் அதில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்க அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் திரு முகமது அப்துல்லா அல்ஹப்‌ஷி நேற்று ஒரு விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்தனர். படத்தில் அணிவகுப்பின்போது ஆடிய நடனத்தைச் சிலர் ஆடிக் காட்டுகின்றனர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பொதுப் பிரச்சினைகளைக் களைய அரசு உதவும்

பொதுவான பிரச்சினைகளைக் களைய நிறுவனங்களுடன் அரசாங்கம் சேர்ந்து செயல்படத் தயாராக உள்ளது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்(படம்) தெரிவித்துள்ளார். சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்காக சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபை நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார். மின்னிலக்க இடையூறுகளை எதிர்நோக்குவதில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி செயல்பட வேண்டும். உலகளாவிய விரி வாக்கத்துக்கும் அவை ஒன்றுபட்ட முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று திரு ஹெங் கேட்டுக் கொண்டார்.

முதியோர் பராமரிப்பில் தேவை அளவுக்கு வளம்

சிங்கப்பூரில் முதியோர் பராமரிப்புத் தேவைகளை நிறைவேற்ற போதிய அளவுக்கு வளம் இருப்பதாக சுகா தார அமைச்சு உறுதிபட தெரி வித்து இருக்கிறது. இங்கு கடந்த காலத்தில் முதி யோர் பராமரிப்புக்கான சேவைகள் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கின் றன என்று அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று விளக்கினார். சிங்கப்பூரில் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது என்றும் அதற்குப் போதிய வசதிக ளையோ மானியங்களையோ அர சாங்கம் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் லியன் அறநிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

‘டச் அண்ட் கோ’ பணம் நிரப்பும் சேவை நிறுத்தப்பட்டது

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு வுக்குச் செல்லும் கார்கள் இனி ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடியில் தங்கள் ‘டச் அண்ட் கோ’ அட்டைகளில் பணம் நிரப்ப முடியாது. இந்தச் சேவை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நிறுத்தப்பட்டது என்று காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

குடிநீர்க் குழாய்க்குச் சேதம்: $44,000 அபராதம்

தெம்பனிஸ் அவென்யூ 5ம் தெம் பனிஸ் சென்ட்ரல் 2ம் சந்திக்கும் இடத்திற்கு அருகே இருக்கும் வேலை இடம் ஒன்றில் முக்கியமான குடிநீர்க் குழாயைச் சேதப்படுத்திய தற்காக சிசிஇசிசி (CCECC Singapore) சிங்கப்பூர் என்ற நிறுவனத் திற்கு $44,000 அபராதம் விதிக் கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட குழாய் 30 செ.மீ. விட்டம் உள்ளது என்றும் இந்தச் சம்பவம் 2017 நவம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது. குழாய் சேதம் அடைந்ததன் காரணமாக தண்ணீர் பக்கத்தில் இருக்கும் சாலையில் வழிந்து ஓடியது. அருகே இருக்கும் நான்கு வர்த்தகக் கட்டடங்களுக்கு தண் ணீர் வழங்கீடு பாதிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை தத்து எடுக்கலாம்

ராணுவம், போலிஸ், குடிமைத் தற்காப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்று இருக்கும் மோப்ப நாய்களை பொதுமக்கள் இப்போது தத்தெடுத்துக் கொள்ளலாம். அவற்றை வீடமைப்பு வளர்ச் சிக் கழக அடுக்குமாடி வீடு களில் வைத்து வளர்க்க ஒரு புதிய ஓராண்டு முன்னோடி விரிவாக்கத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு தரப்படுகிறது. சிங்கப்பூரில் 2012ல் நாய் தத்தெடுப்புத் திட்டம் ஒன்று நடப்புக்கு வந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வீவக பேட்டைகளில் நாய் களை வளர்க்க அந்தத் திட்டம் அனுமதி அளித்தது.

சாகசக் காட்சியைத் தொடர்ந்து கழன்ற கூரைச் சட்டங்கள் சரிசெய்யப்பட்டன

சிங்கப்பூர் குடியரசு விமானப்படை சனிக்கிழமையன்று காலையில் சாகசக் காட்சி நடத்தியதைத் தொடர்ந்து, மரினா பே உல்லாசப் படகு நிலையத்தின் அலங்காரக் கூரையின் சட்டங்கள் கழன்றுவிட்டன. சில சட்டங்கள் கழன்றுவிட்டதாகவும் ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பாதிப்படைந்த சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் அந்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிபட தெரிவித்தார். பிற்பகலில் நடந்த இரண்டாவது ஆகாய சாகசம் காரணமாக வேறு பிரச்சினை ஏதும் இல்லை என்றார் அவர்.

Pages