You are here

சிங்க‌ப்பூர்

இரு ஆடவர்களைத் தாக்கிய தம்பதி; சன்னல் உடைப்பு

ஸ்பூனர் ரோட்டில் இருக்கும் புளோக் ஒன்றின் முதல்மாடி ஓரறை வீட்டில் தம்பதி இருவர், இரண்டு ஆடவர்களை மூங்கில் கழிகள் உட்பட பலவற்றையும் கொண்டு தாக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பாகி இருக் கிறது. எட்டு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி ஜூலை 10ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அந்தக் காணொளியில் தென் பட்ட மாது, வேலையில்லாதவர் என்றும் அவருக்கு 35 வயது இருக்கும் என்பதும் அந்தக் காணொளி சென்ற சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

கோபத்தை காட்ட குழந்தையை கொடுமைப்படுத்தி காணொளி

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கவலையடைந்தார். அவர் தன் முதலாளியின் ஒரு வயது குழந்தையைக் கொடுமைப் படுத்தி அதை தனது கைத்தொலை பேசியில் படமாக எடுத்து அந்தப் படங்களை தன்னுடைய காதல னுக்கு அனுப்பினார். தனக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதைக் காத லனுக்குக் காட்டுவதற்காக அந்தக் காணொளிப் படங்களை எடுத்து அந்த மாது அனுப்பியதாக விசார ணையில் தெரிவிக்கப்பட்டது. லெஸ்லி ஆன் பெல்மோன்ட் டெய்சா என்ற அந்தப் பெண்மணி இந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கைக்குழந்தையை ஒரு தலை யணையில் வைத்து அழுத்தினார்.

லிட்டில் இந்தியா ரெக்ஸ் திரையரங்கு மூடப்பட்டது

எஸ். வெங்கடேஷ்வரன்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் திரைப்பட ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கம் தனது கதவுகளை மூடிவிட்டது. ‘நார்த்-=சௌத் கொரிடோர்’ எனும் வடக்கு=தெற்கு விரைவுச்சாலைப் பணிகளுக்காக மூடப்பட்டு வரும் பல கட்டடங்களுள் மெக்கென்ஸி சாலை யில் அமைந்திருக்கும் ரெக்ஸ் திரை யரங்கமும் ஒன்று. இதே காரணத்துக்காக அருகில் உள்ள எலிசன் கட்டடமும் மூடப்பட்டு அங்கிருந்த கடைக்காரர்களிடமிருந்து கடைகளையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேராதவர்களுக்குப் புதிய திட்டம்

சிங்கப்பூர் அரசாங்கம், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேராத வர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி தகவல் தொழில் நுட்பத் துறையின் பின்னணியில் லாதவர்களும் தகவல் தொழில் நுட்பத் துறையின் நிபுணத்துவ ஆற்றலைப் பெறலாம். ‘மின்னிலக்க நிபுணத்துவத் திட்டம்’ என்பது இத்திட்டத்தின் பெயர். “குறிப்பாக நிபுணர்கள், மேலா ளர்கள், நிர்வாகிகள், தொழில் நுட்பர்கள் ஆகியோரை நோக்க மாகக் கொண்டு திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு, வர்த்தகத் தரவு மற்றும் புள்ளி விவரங்கள், உள்ளடக்கத்தை உரு வாக்குதல் ஆகியவற்றை பயிற்சி உள்ளடக்கியிருக்கும்.

உதவி மனப்பான்மையுடன் செயல்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்

முக்கிய சாலைச் சந்திப்பை அடைத்துக்கொண்டு நின்ற பேருந்தைத் தள்ளி ஓரமாக நகர்த்திய வெளிநாட்டு ஊழியர் களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. லோவர் டெல்டா சாலையும் கம் போங் பாரு சாலையும் சந்திக்கும் முக்கிய பாதையில் பேருந்து நின்றுவிட்டது. புதன்கிழமை காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் செய்வதறியாது திகைத்துப் போனார். உதவிக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் பலனாக அருகிலிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஓடி வந்தனர். உடனே அவர்கள் பேருந்தை பின்பக்கத்திலிருந்து தள்ளி ஓரமாக நிறுத்த உதவினர். இதனால் ஹார்பர் ஃபிரண்ட் நோக்கிச் செல்லும் பாதை, போக்குவரத்து நெரிசலிலிருந்து மீண்டது.

சிறுமியை பணிப்பெண் வேலைக்குக் கொண்டு வந்த முகவர்

விஸ்தா வேலை வாய்ப்புச் சேவைகள் நிறுவனத்தின் ஏக உரிமையாளரும் பணிப்பெண் முகவருமான 35 வயது கோ சியு டியாங்குக்கு 13 வயது பெண்ணின் வயதை தவறாகக் குறிப்பிட்டதற் காக அவருக்கு அதிகபட்ச அபராதத் தொகையான $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பதின்ம வயதுடைய அந்தப் பெண் சென்ற ஆண்டு விரல் ரேகைப் பதிவுக்காகவும் புகைப்படத் திற்காகவும் பெண்டமியர் சாலை யில் உள்ள மனிதவள அமைச்சின் சேவை மையத்திற்குச் சென்ற போது அவரது உண்மையான வயது தெரிய வந்தது. முகவர்தான் பெண்ணின் சார்பாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தார் என்பதும் தெரிய வந்தது.

பிறப்பு எண்ணிக்கை ஏழு ஆண்டு காணாத சரிவு

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் 39,615 குழந் தைகள் பிறந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண் ணிக்கை 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் நான்கு விழுக்காடு குறைவு. அந்த ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 41,251. மேலும் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இது குறைவான பிறப்பு விகிதம்.

பள்ளிக்கு முந்தைய கற்பித்தலில் புதிய முறை

பள்ளிக்கு முந்தைய கல்வி நிலையங்களில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படவுள் ளது. குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், சிறுவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு புதிய கற்பித்தல் முறை சோதனை செய்யப்படவுள்ளது. அகரவரிசை முறையிலான இந்தக் கற்பித்தல் மூலம் குழந்தை களால் எளிதில் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். அத்து டன் அவர்களுடன் ஒருவருக் கொரு வர் என்ற அடிப்படையில் உரையாடுவதன் மூலம் அவர் களின் வளர்ச் சிக்கு ஊக்க மூட்டுவதாக இது அமையும். தொடக்ககால குழந்தைப் பருவ மேம்பாட்டு முகவையும் தெமா செக் அறநிறுவனமும் இணைந்து இந்த முன்னோடித் திட்டம் பற்றி நேற்று அறிவித்தன.

அனைவரையும் உள்ளடக்கும் கல்வி

உடற்குறைபாடுள்ள அல்லது சிறப்புத் தேவைகளுள்ள பிள்ளைகளையும் பெரும்பாலா னோர் செல்லும் பள்ளிகளில் சேர்க்க அதிகம் செய்ய வேண் டும் என்றார் வழக்கறிஞரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சியா யொங் யொங். நரம்பு, தசைநார் கோளாறு உள்ள அவர், பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியில் படித்தபோது சக மாணவர்களால் தான் பயனடைந்ததாக நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். தமது இளமைக் காலத்தை நினைவுகூர்ந்தபோது அவருக்குத் தொண்டை அடைத்தது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வித் திட்டத்திற்கான தேவை குறித்து அவர் பேசினார்.

நாடாளுமன்றச் செய்தி: துணைப்பாட வகுப்பு, விளம்பரங்கள்

கல்வியை ஒரு சூதாட்டமாக்கும் துணைப்பாட வகுப்பு நிலையங் களும் விளம்பரங்களும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் இணை பேராசிரியர் மகாதேவ் மோகன். இத்தகைய டியூஷன் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், இவை நம்பமுடியாத பயன்களைத் தருவதாக உறுதிகூறும் உடல் மெலியும் மாத்திரை விளம்பரங்களைப் போன்றது என்றார்.

Pages