You are here

சிங்க‌ப்பூர்

சட்டவிரோதமாக காரை ஓட்டி மரணம் விளைவித்தார்

ஓங் ஹான் யூ என்பவர் 2016 மே மாதம் தனக்கு 17 வயதானபோது வாடகை கார் ஒன்றைச் சட்ட விரோதமான முறையில் பெற்று அதை ஓட்டிச்சென்று சாலையில் ஒருவருக்கு மரணத்தை ஏற் படுத்திவிட்டார். இறந்துபோனவர், ஒரு மோட் டார்சைக்கிளில் பின்னிருக்கை யில் அமர்ந்து சென்றுகொண்டு இருந்தார். ஓங்கிற்கு இப்போது 20 வயதாகிறது. அவர் தேசிய சேவை ஆற்றி வருகிறார். ஏமாற்றியது, அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற் படுத்தியது, விபத்து நிகழ்ந்த தும் உதவத் தவறியது ஆகியவை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டு களின் பேரில் ஓங் நேற்று குற் றத்தை ஒப்புக்கொண்டார்.

‘பார்கின்சன்ஸ்’ நோய் பற்றிய விழிப்புணர்வு முக்கியம்

ஒருவருக்கு ‘பார்கின்சன்ஸ்’ எனப் படும் ஒருவகை நடுக்குவாத நோய் ஏற்படும்போது, அவரது மைய நரம்பு மண்டலம் நாளடைவில் சிதைந்து போவதால் அவர் அதனால் இறந்துவிடுவார் என்பது பலரது எண்ணம். ஆனால், அந்நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றல்ல. துடிப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் ‘நிமோனியா’ போன்ற இதர நோய்களைத் தவிர்க்க முடியும். பார்கின்சன்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், ஹுவா சோங் கல்விக் கழகத்தைச் சேர்ந்த 10 மாண வர்கள் நேற்று பொங்கோல் வாட்ட ர்வே பூங்காவில் நன்கொடை ஓட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடு: முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கருத்து

சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயிலின் சுவர் களில் உள்ள வெள்ளி முலாம் பூச்சுகள் துருப்பிடித்திருந்தன, ஏதோ ஒன்று சரியில்லை என்ற சந்தேகத்தை எழ வைத்தது. அந்த முலாம் பூச்சுகளை மாற்ற சுமார் $750,000 செலவழிக்கப்பட்டு இருந்தாலும், அவை ஆதாரபூர் வமாக மாற்றப்பட்டிருப்பது தென் படவில்லை. அதைத் தொடர்ந்து இன்னும் பல சந்தேக அறிகுறிகள் சிறிது சிறிதாகத் தென்படத் தொடங்கின.

சுவர் மீது மோதிய டாக்சி

பிடோக் நார்த் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் உள்ள ஒரு சுவர் மீது டாக்சி ஒன்று நேற்று மோதியது. இந்தச் சம்பவம் அங்கு இருந்த வழிப்போக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புளோக் 216 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் முற்பகல் 11.50 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத் ததாக போலிஸ் கூறியது. டாக்சி ஓட்டுநர் மருத்துவ மனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டாக்சியை பின்னோக்கிச் செலுத்திய அதன் 68 வயது ஓட்டுநர், சுவர் மீது மோதியதாக அறியப்படுகிறது.

பாலியல் நடவடிக்கைகள் தொடர்பில் 162 பேர் கைது

பாலியல் தொழில் புரிந்த சந்தேகத்தின் பேரில் போலிஸ் 23 நாட்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 162 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 157 பெண்கள் அடங்குவர். எஞ்சிய ஐந்து ஆண்கள் 19க்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்த அதிரடி சோதனை கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுற்றதாக போலிஸ் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, ஆறு போலிஸ் பிரிவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுதும் உள்ள பல்வேறு இடங்களில் சோதனையை மேற் கொண்டனர்.

செங்காங் பொது மருத்துவமனை இம்மாதம் 18ஆம் தேதி திறக்கப்படுகிறது

செங்காங் பொது மருத்துவமனை இம்மாதம் 18ஆம் தேதியன்று திறக்கப்படவிருக்கிறது. அதிகரித்து வரும் மூப்படையும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் புதிய பொது மருத்துவமனைகளில் செங் காங் மருத்துவமனையும் ஒன்று. அதனுடன் இணைக்கப்பட்டிருக் கும் செங்காங் சமூக மருத்துவ மனை பத்து நாட்கள் கழித்து இம்மாதம் 28ஆம் தேதியன்று திறக்கப்படும். பொது மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளை மறுவாழ்வு சிகிச்சைக்கு உட்படுத்த இந்தத் தாமதம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

கோல்டன் மைல்: மறுமேம்பாட்டு விற்பனைக்கு ஆதரவு

கோல்டன் மைல் கடைத்தொகுதி ஒட்டுமொத்த மறுமேம்பாட்டு விற்பனைக்குத் தயாராக உள் ளது. கடைத்தொகுதியிலுள்ள 550 இடங்களின் 724 உரி மையாளர்கள் இது குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ளனர். இதன் வழியாக ஒப் பந்தம் செயல்படுத்தப்படுவ தற்கு தேவைப்படும் 80 விழுக் காடு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மறு மேம்பாட்டு விற்பனைக்கான தேதி ஆகஸ்ட் 3. நிக்கோல் ஹைவேக் கும் பீச் ரோட்டுக்கும் இடையிலான அந்த கடைத் தொகுதியில் மொத்தம் 718 இடங்கள் உள்ளன.

கேரளா வெள்ளம்: வெளியேற்றப்பட்ட 59 சுற்றுப்பயணிகளில் ஏழு சிங்கப்பூரர்கள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ‘பிளம்ப் ஜூடி’ உல்லாச விடுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 59 சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அந்தப் பயணிகளில் ஏழு பேர் சிங்கப்பூரர்கள்.

தேநீருக்கு அழைத்த போலந்து அதிபர்; சிங்கப்பூர் சுற்றுப்பயணிக்கு இன்ப அதிர்ச்சி

சிங்கப்பூர் ஆடவரும் அவரது வருங்கால மனைவியும், மேலும் இரண்டு தைவானிய சுற்றுப் பய ணிகளும் போலந்து அதிபர் மாளி கைக்குள் அழைக்கப்பட்டனர். போலந்து அதிபர் திரு ஆன்டிர் செஜ் டுடா தேநீர் விருந்துக்காக கடந்த மாதம் அவர்களைக் கார ணமின்றி அழைத்தார். டான் டொக் சேங் மருத்துவ மனையில் மூத்த மருத்துவத் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திரு கந்தன் ஆறுமுகம் தமது வருங்கால மனைவி குமாரி ஈவா பாவ்லெக்குடன் போலந்து தலைநகர் வார்ஷாவுக்குச் சென் றார். சிங்கப்பூரின் பிரஞ்சு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் குமாரி ஈவா, போலந்தில் பிறந்தவர்.

தெம்பனிஸ் வீவக வீட்டு வாசலில் மீன் தொட்டி

தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட் டின் தரைத்தளத்தில் அமைந்திருக் கும் வீட்டு வாசலின் படிக்கட்டுகள் மீன்தொட்டியாக மாற்றப்பட்டிருக் கிறது. அதில் ஒன்பது ‘கொய்’ மீன் களும் அழுக்குகளைத் தின்னும் இரண்டு ‘சக்கர்’ மீன்களும் நீந் திக்கொண்டிருக்கின்றன. தெம்பனிஸ் ஸ்திரீட் 41ல் உள்ள தரைத்தள வீட்டு முகப்பில் தான் இந்த வித்தியாசமான மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் செடி கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்தான் நீல நிறத்திலான மீன் தொட்டி உள்ளது.

Pages